எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு நாள் மனசு சரி இல்லன்னு கோயிலுக்கு போயிருந்தேன்......

ஒரு நாள் மனசு சரி இல்லன்னு கோயிலுக்கு போயிருந்தேன்...
ரொம்ப கோபமா ... இறைவா ஏன் என்னை இப்படி கஷ்டபடுத்துற...நா பொறந்து 20 வருடம் ஆச்சி ஆனா இன்னும் கஷ்டபடுறேன்...எப்பதான் என் கஷ்டத்த தீர்த்து வைப்ப இன்னும் எத்தனை நாள் நா கஷ்ட படனும்னு கேட்டுகிட்டு உக்கார்ந்து இருந்தேன்....இறைவனது பதில் உடனே கிடைத்தது ...என் எதிரில் அமர்ந்திருந்த 80 வயது முதியவர் மூலம் ...நான் இறைவன்கிட்ட என்ன கேட்டேனோ அதையே அந்த பாட்டியும் கேட்டாங்க ...நானாவது 20 வருஷம் தான் ஆனா அந்த பாட்டிக்கு 80 வருஷம் ....அப்பா தான் நினச்சேன் நம்ம இன்னும் நிறைய வருஷம் கஷ்ட படணும்னு...அன்னிலிருந்து இறைவன் கிட்ட என்னை ஏன் கஷ்ட படுத்துரனு கேக்குறத நிறுத்திட்டேன் ...எந்த கஷ்டம் வந்தாலும் இதல்லாம் கொஞ்சம் தான் இன்னும் நிறைய இருக்குனு நினச்சி என்னை நானே சமாதனம் பண்ணிப்பேன்....

நாள் : 30-Mar-14, 7:10 pm

மேலே