எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்துல் அவள் அன்பிற்கு நான் அடிமை; எனது இல்லத்தரசியே...

அப்துல்


அவள் அன்பிற்கு நான் அடிமை;

எனது இல்லத்தரசியே !
என்றும் நான் உனக்கு அடிமையாக இருக்கவே விரும்புகிறேன்..!
உன் பாதங்களை என் மடிமேல் வைத்து பிடித்துவிடுகயில்,
உன் குறும்பு பேச்சும்,
உன் கள்ளப்பார்வையும்
அன்பெனும் சாட்டையால் அடித்து என் மனதை
இன்பச் சித்தரவதை செய்கின்றன..!
ஏலேலு ஜென்மங்களுக்கும் வறுமை என்பதை நான் அறியாதவனாவேன்,
அள்ளி அள்ளி கொடுக்கிறாய் அன்பெனும் கூழியை,
காதல் குற்றம் செய்து உன் மனச்சிறையிலே
ஆயுள் தண்டனை அனுபவிக்கப் போகிறேன்,
விடுதலையானால் உடனே மரணித்து போகிறேன்,
அதுவரை நான் உன் அடிமையாகவே இருக்க விரும்புகிறென்...

                     -அப்துல் சிவப்பு ரோஜா இரசசிகன்🌹🌹

நாள் : 27-Mar-17, 4:46 pm

மேலே