எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இல்லற வாழ்க்கையின் பயன்! இல்லற வாழ்க்கையின் பயன்! தொல்காப்பியர்...

இல்லற வாழ்க்கையின் பயன்!

family_1758596g

தொல்காப்பியர் “கற்பியலின் இறுதியில்,
இக் காதல் – களவு – கற்பு – குடும்பம் – வாழ்க்கை என்றெல்லாம்,
காலத்தைப் போக்கியதன் பயன் யாது? –
இவ்வாறு சிந்திக்க வைக்கின்றார்

. மண்ணுக்குப் பாரமாக
வாழ்ந்து மடிவதா வாழ்க்கை?

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
“சிறந்தது’ பயிற்றல் இறந்ததன் பயனே! (1138)

காமம் – உடலின்ப வேட்கை மட்டுமன்று; விருப்பம், ஆசை எல்லாம்.
சான்ற – நிறைந்து முடிந்த, நன்கு ஆர அனுபவித்துத் தீர்ந்த.

தமிழ் நெறிப்படி துறவு என்பதுகூட, இவ்வாறுதான் அரும்பி, பூத்து,
காய்த்து, கனிந்து என்பதுபோல, உலக இன்பங்களை நன்முறையில்
துய்த்து, ஒவ்வொன்றிலிருந்தும் படிப்படியாய் விடுபட்டு
அடையும் நிலை. அல்லாதன பெரும்பாலன “கூடா ஒழுக்கமாகவே’
முடியும்.

மிகமிகச் சிலர்க்கு அரிதாக முடியுமிதைப் பலரும் மேற்கொள்வதாகக்
கொண்டு, பலமடங்கு இன்ப வாழ்வில் மூழ்கி, அழிகின்றனர்.
தவம், துறவுப் போர்வையில் மறைந்து திரிவதைக்
“கூடா ஒழுக்கம்’ என்பார் திருவள்ளுவர்.

எனவே, நன்கு வாழ்ந்து, அனுபவித்துத் தீர்ந்து, “போதும்’ என்ற
நிலை தானே வந்துற்றபோது, தமக்குப் பாதுகாவலாக அமைந்த
தன் மக்கள், பேரன், பேர்த்தி (பெயரன், பெயர்த்தி) உறவுகளோடு;
துவன்றி – கலந்து உரையாடி மகிழ்ந்து இன்புற்று, (இன்றைய
முதியவர்களுக்குக் கிடைக்காத ஒன்று இது)
அறம்புரி சுற்றமொடு – தான் பழகும் நண்பர்கள், அன்பர்கள் ஆகிய
அறநெறி போற்றி வாழ்பவர்களுடன் கூடி; இறந்ததன் பயன் –
முன்னைய பொருள், இவ்வளவு காலம் கடந்ததன் பயன் என்பது.
இறந்தது – கடந்துபோனது. இவ்வளவு நாள் வாழ்ந்ததன் பயன் யாது?

“வாழ்ந்ததன் பயனே’ என்று இன்று சொல்லலாம்.
அது என்ன? சிறந்தது பயிற்றல் – தமக்கு எது சிறந்ததென்று
தோன்றுகிறதோ, அல்லது உலகம் எது சிறந்தது எனப் போற்றுமோ,
அத்தகைய நற்செயல்களில், தொண்டில் ஈடுபடுதல்.

திருவள்ளுவர்க்கும் தொல்காப்பியர்க்கும் உள்ள ஒற்றுமை நுட்பம்
இது. “சிறந்தது’ என்று பொதுப்படக் கூறிவிட்டார். வீடுபேறு எய்துதற்கு
ஏற்றவை என்பதுமுதல், தன்னுடனுள்ள சமுதாய முன்னேற்றத்திற்கு
என்பதுவரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டுமே
என விட்டுவிடுகின்றனர். வாழ்க்கை பயனுடையதாக முடியட்டும்
என்பதே தொல்காப்பியம்.
-தமிழண்ணல்
(நன்றி: தொல்காப்பியச் சுடர்மணிகள்)





நாள் : 7-Apr-17, 3:47 pm

மேலே