ஓர் பாசம் அது என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
ஓர் பாசம்
அது என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னை சூழ்திருந்தது
ஆனால் அது என்னை இந்த மண்ணிற்கு வர செய்த என் தாயின் பாசம் அன்று
ஓர் அக்கறை
அது வலி மாறி செல்கையில் என்னை நல்வழி படுத்தியது
ஆனால் அது தந்தையின் அக்கறை அன்று
ஓர் கரங்கள்
நான் துவந்து இருந்த காலங்களில் எனக்கு தனது கைகள் மூலம் நம்பிக்கை தந்தது
ஆனால் அது என் உடன் பிறந்தாரின் கரங்கள் அன்று
இதற்கு விடை தேடி சோர்ந்திருந்தேன்..
அப்போது தான் பாசத்துடனும் அக்கறையுடனும் இருக்கரங்கள் கொண்டு என்னை
என் நண்பர்கள் எழுப்பினார்கள்
அப்பொழுது தான் என் தேடலின் விடையை அவர்களில் கண்டேன்.....
-ஜெகதீஷ்.வி