எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி...

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே .
அழகிய கண்ணே..... .
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா .
அழகிய கண்ணே..... .
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான் .
அழகிய கண்ணே..... .
மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது .
அழகிய கண்ணே..... .

நாள் : 23-May-17, 7:23 am

மேலே