தேடல் எல்லாம் உள்ள பணக்காரனின் தேடல் மனநிம்மதிக்காக அனைத்தையும்...
தேடல்
எல்லாம் உள்ள பணக்காரனின் தேடல்
மனநிம்மதிக்காக
அனைத்தையும் துறந்த ஞானியின் தேடல்
முக்திக்காக
எளிய ஏழையின் தேடல்
ஒரு வேலை உணவிற்காக
அரசியல்வாதியின் தேடல்
மேலும் உயர்ந்த பதவிக்காக
கூண்டிலிருக்கும் பறவையின் தேடல்
எல்லையில்லா வானத்திற்காக
பாயும் புலியின்
தேடல் இரைக்காக
துள்ளித் தப்பிக்கும் மானின்
தேடல் வாழ்விற்காக
மீனவனின் வலையிலிருந்து தப்பிக்க மீனின்
தேடல் அதிர்ஷ்டத்திற்காக
தேவைகள் பலவாயினும்
தேடல்கள் ஒன்றே
இல்லாத ஒன்றைத் தேடித்தேடி
நம் வாழ்க்கை நகர்கின்றதே!!!