எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Topic :ஒருதலை காதலா.. எத்துனை காதல் என் மேல்.....

Topic :ஒருதலை காதலா..

எத்துனை காதல் என் மேல்..
என் பாராமுகத்தால் நோய் கொண்டு உடல் இளைத்து தேய்கிறாய்..

நான் ஓர கண்ணால் கண்டதும் மையல் கொண்டு மீன்டும் பௌர்னமியாய் பூக்கிறாய்..

தேய்வதும் பூப்பதுமாய் நம் ஊடலும் காதலும்..

பால்யத்தில் "நிலா நிலா ஓடி வா" என அழைத்த குரலுக்கு என்னுடன் வந்து விளையாடினாய்.. மல்லிகைப்பூ கொண்டு வந்தாய்..

உன்னை காணாமல் உணவும் கூட உண்ணவில்லை.. பால்யத்தில் தினம் தினம் நிலாச்சோறு தான்...

உற்ற நன்பனாய் உன்னை நினைத்திருந்தேன்.. 

உன்னுடனான பால்ய நட்பை காதல் என புரிந்து கொண்டாய்..
எனக்கு இத்தனை நாள் புரியவில்லை..

நீயில்லா அமாவாசையில் தனித்த இரவில் பசலையில் புரிந்து கொண்டேன் நம் காதலை..

என் காதலா..கொஞ்சம் விளையாட்டாய் கள்ள மவுனம் கொண்டேன் ... உன் காதலை ரசிக்க..

வெள்ளை அம்பரத்தில் இருளில் தேவதாசாய் என்ன செய்கிறாய்..?

உன் துனணயாய் இருந்த நாயையும் விற்று விட்டாயா எனக்கு பயமென்று..

விபரித உயரத்தில் வானில் ஏறி நிற்கிறாய்..

கிழிறங்கி வந்து விடு என்  நிலா காதலா.. விழுந்து விட போகிறாய்...

பதிவு : புரவி
நாள் : 1-Jul-17, 1:22 pm

மேலே