தாய்த்தமிழ் தமிழோடு தமிழன் மனம் துஞ்சும்! - நாளும்...
தாய்த்தமிழ்தமிழோடு தமிழன் மனம் துஞ்சும்! - நாளும்
நறுந் தகவல் கேட்க மனமோ கெஞ்சும்!
தமிழோடு சரிநிகராக பிறமொழிகள் அஞ்சும்! - வேற்று
மொழிக் கலப்பின்றி உலவ அகலும் நஞ்சும்!
மரபு மீறா மாண்புகள் குழாவிக் கொஞ்சும்! - மாறாக
வரம்பு மீறினால் என்னதான் மிஞ்சும்!
கைகொட்டி சிரிக்கும் தமிழர் பிஞ்சும் - என்றும்
கலங்கரை விளக்காய் தமிழ் விஞ்சும்!