காட்சி ஊடகத்தின் நிலை: நாள்தோறும் அதிகரிக்கும் பதட்டம், நாள்தோறும்...
காட்சி ஊடகத்தின் நிலை:
நாள்தோறும் அதிகரிக்கும் பதட்டம், நாள்தோறும் பறிபோகும் அடிப்படை உரிமை,
இவையனைத்தும் தேர்தெடுக்கப்பட்ட அரசால் மக்கள் அடையும் பயன்.
ஊடகங்களும் பத்திரிக்கைகளும் போராட்டத்தை, சமூக எழுச்சியை கடத்தும் கருவி
மேற்கூறிய கூற்று பள்ளி காலத்தில் என்னக்கு சொல்லப்பட்ட செய்தி
சமகால ஊடகங்களை நினைத்து பார்கின்றேன்
அவர்களுக்கு சில மாதத்திற்கு முன்பு சிம்பு, சுஜித்ரா தேவை பட்டார்கள்
தற்போது ரஜினி மற்றும் விஜய்
எப்பொழுதும் அவர்களுக்கு இரை போடும் சு. சாமிகள் மற்றும் காவிகள்
இவை காட்சி விவாத ஊடகங்களின் பனி
ஓய்வு பெற்ற நடிகர் நடிகைகளை வைத்து நடன நிகழ்ச்சி
பிரபலங்களை வைத்து தேனீர் நிகழ்ச்சி
எப்பொழுதும் வன்மங்களை காட்டும் நெடுந்தொடர்கள்
இவை யாவும் தொலைக்காட்சிகளின் முதன்மை பனி
இன்று விவசாயிகளுக்கு ஆடை இல்லை,
ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தண்ணீர் இல்லை
தமிழனுக்கு இந்திய தேசத்தில் இடம் இல்லை
உரிமையை பேசுபவனுக்கு தேசதுரோகி பட்டம்
அரசின் கருத்தை மறுத்தால் குண்டர் சட்டம்,
மாட்டுக்கறி சாப்பிட்டால் ஆன்டி- ஹிந்து இன்னும் பல பல புதுமைகள் நாள்தோறும் - மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.
மேற்கூறிய சிறு மக்கள் பிரச்சனைகள் யாவும் (அரசு மற்றும் ஊடகத்தின் பார்வையில்) ,
ஊடகத்தின் ஒருநாள் செய்தியாவது மிக அரிது
அனால் ரஜினியின் ஒரு வார்த்தை ஊடகத்தின் இருவார செய்தி
இன்று தமிழ் தேசத்தின் ஒட்டுமொத்த பொழுதுபோக்கு கமலின் பிக் பாஸ்
என் ஆசை எல்லாம் நிச்சயம் பல பிக் பாஸ் சீசன்கள் இருக்கும்
அதை பார்க்க மக்களும் இன்றுபோல் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்
______________________________________________________
பின் குறிப்பு:
நான் போராளி அல்ல. பொறியாளன்