எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே..23 பறவைகளும் (free birds) கவலைகளும் (worries)...

எண்ணம்


சிந்தனை செய்மனமே..23
பறவைகளும் (free
birds) கவலைகளும் (worries)
பறவைகளைச் (birds)
சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அது ஓரிடத்தில் நிலையாக உட்காருவதில்லை, இங்கும்
அங்கும் பறந்த படியே இருக்கிறது. சுதந்திரமாக எங்கும் கவலையின்றிப் பறப்பதற்கு அவைகளுக்கு
இறைவன் அருளியிருக்கிறான். தனது கூட்டைக் கட்டுவதற்கு மட்டும் நிலையாக ஓரிடத்தைத் தேர்ந்தெடுக்கிறது.
கவலைகள், துயரம்,
மனவழுத்தம், பதற்றம்,  மிகுஉணர்ச்சி இவையெல்லாமே(worries)ஒரே அர்த்தத்தைத் தரக்கூடியதாக இருப்பினும், ஒரு விதத்தில், இவை அனைத்துமே
பறவைகள் போல சுதந்திரமாக, மீண்டும் மீண்டும் நம்மைச் சுற்றியே எந்நேரமும் பறந்து கொண்டேயிருக்கின்றன..
மனதில் எழும் தேவையற்றஎண்ணப் பறவைகளை,
மனதைச் சுற்றிப் பறக்கவிடாமலும்,
நம் மனதுக்குள் நிலையாக குடிபுகாமலும் பார்த்துக் கொண்டால், அது மனதுக்கும் உடலுக்கும்
இதமளிக்கும், வாழ்க்கை எளிதாகும்.Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 17-Jul-17, 10:57 am
மேலே