எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

-------------------------------------------------------------------------------- விவசாயிகளின் பிரச்சினை கதிராமங்கலம் பிரச்சினை நெடுவாசல் பிரச்சினை...

  --------------------------------------------------------------------------------
விவசாயிகளின் பிரச்சினை 
கதிராமங்கலம் பிரச்சினை 
நெடுவாசல் பிரச்சினை 
குடிநீர் தடுக்குப்பாடு பிரச்சினை 
சுகாதார சீர்கேடு 
வைரஸ் / டெங்கு காய்ச்சல்கள் 
நீட் தேர்வு பிரச்சினை 
வேலையில்லா திண்டாட்டம் 
திரைப்படத் தொழில் பிரச்சினை 
எங்கும் எதிலும் லஞ்சம் 
சாதிமதங்களின் போர்க்கொடி 
விலைவாசி உயர்வு 
GST / பணவீக்கம் பிரச்சினை 
பொதுவினியோக முறை 
--------------------------------------------


இவ்வளவு இருக்கிறது மக்களின் அடிப்படை 
அவசியமான பிரச்சினைகள் . உடனடியாக 
தேர்வு காண வேண்டியவை யாவும் .ஆனால் ஆளுகின்ற மாநில அரசாங்கத்தில் கட்சியில் 
மூன்று பிரிவுகள் ..மாறி மாறி ஊழல் , லஞ்சம் புகார் 
ஒருவரை ஒருவர் குறைகூறி சேற்றை பூசிக்கொள்வது 
தான் நடக்கிறது. இதை பொழுது போக்குக்காகவும் , 
தனது சுயநல அரசியல் வேட்கைகளுக்கு பயன்படுத்தி 
கொள்கிறது மத்திய அரசு .இறுதியாக மிகுந்த சிரமப்படுவதும் , தத்தளிப்பதும் 
அடிப்படை உரிமைகள் கூட நிறைவேறா சூழ்நிலையும் 
அனைத்து துறைகளில் ஊடுருவியுள்ள சீர்கேடுகள் 
அனைத்தும் பாதிக்கப்படுவது ...பொதுமக்களே ...அதிலும் 
அடிமட்ட நிலையில் உள்ள மக்களும் நடுத்தர வர்க்கமும்தான் .

இதெற்கெல்லாம் முடிவாக மக்கள் சிந்தித்து முடிவெடுத்து 
அனைத்து குழப்பங்களும் பிரச்சினைகளும் தீர்ந்திட 
வழிகாண்பதற்கு ஒருமித்த கருத்தோடு இணைந்து 
போராடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம் நமக்கு ,,

,சிந்தியுங்கள் ....சிறப்புறுங்கள் ....சீர்மிகு வாழ்வும் பெற்றிட !

பழனி குமார் 
04.08.2017 ​​

நாள் : 4-Aug-17, 9:53 pm

மேலே