எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைப்பு:புதிய இந்தியா பிறந்தது புதிய இந்தியா! இந்த புதிய...

தலைப்பு:புதிய இந்தியா

 பிறந்தது புதிய இந்தியா! 

இந்த புதிய இந்தியாவில் சுதந்திர காற்றை ஸ்வசிக்கின்றோம் என்கின்றனர் பலர்,
 ஆனால் ஏனோ சுவாசிக்க காற்றில்லாமல் மடிந்தனவே பல பச்சிளம் மொட்டுக்கள் இது தான் புதிய இந்தியாவா???!!!

மாடுகளின் உயிரை மதிக்க தெரிந்த புதிய இந்தியாவிற்கு,
ஏனோ மனிதர்களின் உயிரை மதிக்க தெரியவில்லையே
இது தான் புதிய இந்தியாவா???!!!

 சிறுக சிறுக சிட்டுக்குருவியை போல் சேமித்த காசெல்லாம், பருந்தென பறந்து வந்த இரெண்டாயிரம் ரூபாய் நோட்டிற்கு இரையானது ஏனோ?
இது தான் புதிய இந்தியாவா???!!!

 அன்று இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்!,
அனால் இன்று விவசாயியின் முதுகெலும்பை முறிக்கின்றது இந்த இந்தியா!!
இது தான் புதிய இந்தியாவா???!!!

குடிசை தொழிலுக்கு இமயம் அளவு வரி,
 ஆனால் பீட்ஸாக்கும் பர்கருக்கும் சிறிய குன்றளவை விட குறைவு வரி
இது தான் புதிய இந்தியாவா???!!!

 பெண் விடுதலை வேண்டுமென்றானே பாரதி அன்று!
ஆனால் அந்த பெண்களுக்கு  பாதுக்காப்பே இல்லையே இந்த நாட்டில் இன்று !!
இது தான் புதிய இந்தியாவா???!!!

 பிறந்தது புதிய இந்தியா !!!!!
புத்துயிரை அளிக்க வேண்டிய இந்த புதிய இந்தியா பலரின் உயிரை குடித்து வளருகிறது என்பது தான் கசப்பான உண்மை..... 

வளரட்டும் இந்தியா!!! உயரட்டும் நம் வாழ்க்கை தரம்!!!. மக்களின் வாழ்வை உயர்த்தும் இந்தியவே புதிய இந்தியா!!!. 
அப்படி ஒரு இந்தியா இன்னும் பிறக்கவில்லை.

-Faiz

பதிவு : Faiz81
நாள் : 8-Sep-17, 3:02 pm

மேலே