சிலீரிடவைப்பவளா சிலிர்க்கவைப்பவளா? சிந்திக்கவைப்பவளா ? சந்தோசிக்கவைப்பவளா அமைதியானவளா ஆர்பாட்டமானவளா?...
சிலீரிடவைப்பவளா சிலிர்க்கவைப்பவளா?
சிந்திக்கவைப்பவளா ? சந்தோசிக்கவைப்பவளா
அமைதியானவளா ஆர்பாட்டமானவளா?
ஆனந்திக்கச்செய்பவளா !
அவள்
கால் தொடும் போது
சிலீரிடவைத்து சிலிர்க்கவைப்பவள்
மூழ்குவது முத்துஎடுக்க அல்ல
முன்வினை அகற்ற
என்ற உணர்வை
ஏற்படுத்தி சந்தோஷமாக்குபவள்
ஆர்பாட்டமானவளாய் இல்லாமல்
ஆனந்த ப்ரவாஹமெடுத்து
பரவசப்படுத்துபவள்
தெளிந்த நீரோடையாய்
தவழ்ந்து மனதை கொள்ளை
கொள்பவள்
அவள் - கங்கை
எல்லை இல்லாதவள்
எதிர்பார்ப்பில்லாதவள்
கள்ளமில்லாதவள்
களங்கமில்லாதவள்
கர்வமில்லாதவள்
நிகரிலாதவள் .