எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே-26 Doubts and faiths:- சந்தேகமும் (doubts)...

சிந்தனை செய்மனமே-26 


Doubts and faiths:-   சந்தேகமும் (doubts) - - - நம்பிக்கையும் (faith)      


“நம்பிக்கை” என்கிற வார்த்தை சிறியதாக இருந்தாலும், அது மிகப்பெரிய தாத்பர்யத்தை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. சில சமயம், ஏதோ ஒன்றின் மீது, நாம் நம்பிக்கை கொண்டிருக்கும்போது, அது நடக்குமா அல்லது நடக்காதா என்கிற சந்தேகம் எழுவது அனைவருக்கும் சகஜம்தான்.   


“சந்தேகம்” மனிதனின் மிகப்பெரிய எதிரி. எந்த ஒரு காரியத்தையும் சந்தேகத்தோடு செய்தால் அது முற்றிலும் நிறைவேறாது. அப்படி அது நிறைவேறினாலும் அதில் திருப்தி இருக்காது.   நம் வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு காலக்கட்டத்தில் சங்கடங்கள் வரும்போது மட்டும், வாழ்வின் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருப்பதாக சந்தேகம் கொள்கிறோம். கதவுகள் மூடப்பட்டிருந்தாலும் அது உண்மையில் தாளிடப்படவில்லை என்பதை நாமறியோம்.   


Actually, they may be waiting for your knocks...

நம்பிக்கை என்பதை முழுவதும் கொள்ளாமல், எக்காரியத்தையும் சந்தேகத்தின் அடிப்படியில் செய்ய முற்படும்போது அதில் குழப்பமே பெரும்பாலும் நீடிக்கும்.

“நம்பிக்கையின்” மீது சந்தேகப்படுவதும்...

“சந்தேகத்தின்” மீது முழுநம்பிக்கை வைப்பதும்..

மனித இயல்புகளின் ஒன்றாக இருப்பதையும், அதை நாம் செய்யும் செயல்களோடு ஒப்பிடும்போது, இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை, நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

இதுதான் இயற்கை. வாழ்க்கையில் இதைச் சரிசெய்துகொள்ள, அனுபவத்தில் அவ்வப்போது ஒரு செயலைச் செய்யுமுன் சந்தேகம், நம்பிக்கை ஆகிய இரண்டையும் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.         

அன்புடன் பெருவை பார்த்தசாரதி

நன்றி படம்:: கோட்ஸ் ஃபார்.காம்

நாள் : 17-Sep-17, 6:54 pm

மேலே