நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாட்டு முறை இரண்டாம் நாளில்...
நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாட்டு முறை
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ(பன்றி)முகமும் தெத்து பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலை யில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்றவிறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்து வத்தினை வலி யுறுத்துவ தாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.