எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​ அனுபவத்தின் குரல் -15 -------------------------------------- நமது நண்பர்கள்...


​ அனுபவத்தின் குரல் -15

--------------------------------------


நமது நண்பர்கள் அல்லது வேண்டியவர்கள் , எதிரிகள் அல்லது வேண்டாதவர்கள் என்று எவராக இருந்தாலும் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு , அவர்கள் பெறுகின்ற புகழைக் கண்டு நாம் எப்போதும் பொறாமையோ , காழ்ப்புணர்ச்சியோ அவர்கள் மீது வெறுப்புணர்வோ கொள்ளுதல் கூடாது .

அவரவர் திறமையின் அடிப்படையில் , காலத்தின் சூழலில் , பெறுகின்ற வாய்ப்பினை பயன்படுத்தி சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதை மனதார பாராட்டுகின்ற மனப்பக்குவம் இருத்தல் வேண்டும் . 

நாம் எந்த விதத்திலும் அவர்களின் நல்வாழ்விற்கும் , ஏற்றத்திற்கும் குறுக்கீடாகவோ தடைக்கல்லாகவோ நிச்சசயம் இருக்கக் கூடாது . இந்த எண்ணம் அனைவர் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் .


  பழனி குமார்                 

நாள் : 3-Nov-17, 9:22 pm

மேலே