எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோடி தவிப்புக்களுடனான என் இரவு இவ் இராப்பொழுது புலர்ந்துவிடக்...

கோடி தவிப்புக்களுடனான 


என் இரவு


இவ்


இராப்பொழுது 


புலர்ந்துவிடக் கூடாதெனும்


உள் மன ஆதங்கம்❤️




நான் உன்னவனாயும்


நீ என்னவளாயும்


வாழும் இறுதி கட்ட


இந்நிமிடங்களின்


ஆர்ப்பரிப்பு❤️




பரிதவிப்புடனான நம்


பரஸ்பர உரையாடல்களை


மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திச்


செல்லும் மெல்லிய தென்றல்❤️




நான் செல்லப்போகும்


இடங்களெல்லாம்


உன் எழில் கொஞ்சும் வதனம்


தோன்றப் போகும் ஏக்கம்❤️




உன்னை மீட்டும்


வீணையாய் நானும்


நாதமாய் நீயும்


சென்ற தடங்கள்


கோர்த்த கரங்கள்❤️




எப்போதும் இனி வராத 


அந்த இராகங்கள் 


நினைவுகளின் சங்கமமாய்❤️




அந்த நிலவுக்கு கூட 


தெரிந்திருக்கும் போல 


என்மனம் போன்றே


அதுவும் இன்று இருளாகவே❤️




அமாவாசையாம்


என் மனதுக்கு கூட


அமாவாசை தானே...இன்று !




விடியும் நிமிடங்கள்


மணமாலையுடன்


மங்கலகரமாய்


மன மகிழ்வுடன் 


மணப்பந்தலில்


மணவாளனுடன்


தேவதை - நீ 👩‍🔧




ஆணான காரணத்தால்


அழுதிடவும் முடியாமல்


வஞ்சனை செய்தோரை


நிந்திக்கவும் முடியாமல்👨‍🎤




சிந்தனை வெறுமையாக


மனமெங்கும் ரணமாக


ஆறாத வடுவாய் 


உன்நினைவுகளின்


சுமைகளுடன்




விடியாத இரவின்று


வேண்டுமென 


வேண்டுகிறேன் 


மீண்டுமொரு


பிறப்பிலேனும்


வேண்டுமடி 


என்னவளாய்


நீ எனக்கு...!❤️❤️❤️




💜கவிதா லலித்💜


பதிவு : டர்மி
நாள் : 7-Nov-17, 11:55 pm

மேலே