அனுபவத்தின் குரல் - 19 *********************************** நமது வாழ்க்கையில்...
அனுபவத்தின் குரல் - 19
***********************************
நமது வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம் பலரிடம் பழகுகிறோம் . பலரை உற்று நோக்குகிறோம் . சிலரின் கொள்கைகளை ஆய்ந்து அறிந்து பின்பற்றுகிறோம். இது அனைவருக்கும் பொருந்தும் . யதார்த்தம் .
ஆனாலும் சில நேரங்களில் மற்றவர்களின் நடைமுறையும்,செயல்முறையும் நமக்கு ஒத்துப் போகும்.சில எதிர்மறையாக தோன்றவோ இருக்கவோ வாய்ப்புள்ளது .அந்த நேரங்களில் நாம் அமைதியே காக்க வேண்டும் .
அடுத்தவர் செயலில் எண்ணத்தில் நாம் குறுக்கிடுவது வாதிடுவது அவர்களுக்கு பிடிக்காமல் போகவும் நேரிடும் . இதனால் விரோத மனப்பான்மைக்கு வித்திடும் .
ஆகவே இது போன்ற நிலைகளை தவிர்ப்பது நல்லது .அவரவர் நோக்கமும் செயலும் தனிப்பட்ட உரிமை மற்றும் கொள்கை. எனவே ஒவ்வொருவரும் தன்னிலை அறிந்து சூழலை உணர்ந்து பகுத்தறிவுடன் பாதை வகுத்து அதில் பயணித்தல் நன்று .
பழனி குமார்