எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வள்ளுவம் பொய்த்ததா ? "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்...

  வள்ளுவம் பொய்த்ததா ?


"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 
அன்ன நீரார்க்கே உள "என்கிறது வள்ளுவம் இதன் பொருள் காகமானது தனக்கு கிடைத்த இரையை மறைக்காமல் தன இனத்தாரை அழைத்து இந்ததோடு உண்ணும் அதுபோல தனக்கு கிடைத்த செல்வதை மறைக்காமல் மற்றவர்களுக்கும் அளித்து வாழ்பவர்களுக்கே ஆக்கம் செல்வம் நிறைந்திருக்கும் 
ஆனால் இன்றைய நிகழ்வென்ன என்று பார்த்தால் நிறைந்த செல்வம் உள்ளவர்களில் பெரும்பாலோர் இந்த கொடுத்து உதவும் பண்பு இல்லாதவரே தன்னிடம் உள்ள செல்வத்தை மறைத்து அடுத்தவர்களின் செல்வத்தை சுரண்டி பிழைப்பவர்களே. அடுத்தவர்களை கெடுத்து வாழ்பவர்களும் மற்றவர்களை சுரண்டி வாழ்பவர்களும் செல்வர்களாக வாழ்வதும் , கொடுத்து உதவி வாழ்பவர்கள் அடுத்தவர்கள் நலன் பேணி தன் செல்வதை செலவிடுபவர்களும் வறியவர்களாக இருப்பதும் என்ன விந்தை என்று தெரியவில்லை 
கள்வர்கள், கயவர்கள் , பொய்யர்கள் , கை யூட்டு பெறுபவர்கள் மற்ற மனிதர்களை சமூகத்தை சுரண்டி வாழ்பவர்கள் எத்தர்கள் என மிக மோசமான நடத்தை உள்ளவர்கள் செல்வர்களாக வாழ்வதும் நல்லவர்கள் அறச்சிந்தனை உடையவர்கள் , தன் செல்வதை செலவிட்டு பிறர் நலன் பேணுபவர்கள் பிறர் நலனுக்காகவே வாழ்பவர்கள் இவர்கள் எல்லாம் நெளிந்தும் வறுமையின் பிடியில் அகப்பட்டும் அடுத்த வேளை உணவுக்கும் மாற்று துணிக்கும் அல்லல் படுவதை பார்க்கும் போது வள்ளுவ பெருந்தகை கூறிய குறள் மொழி பொய்த்ததோ ? என ஐயுற தோன்றுகிறதுயாரேனும் இதற்க்கு சரியான காரணமும் தீர்வும் கூறிட இயலுமெனில் தெளிவுறுத்தவும்  

நாள் : 9-Nov-17, 9:27 pm

மேலே