அனுபவத்தின் குரல் -22 ************************** மனிதனாக பிறந்த நாம்...
அனுபவத்தின் குரல் -22
**************************
மனிதனாக பிறந்த நாம் அனைவரும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்தல் வேண்டும் .அல்லது அவ்வாறு செயலாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நாமும் ஒரு கருவியாக,துணையாக இருத்தல் மிகவும் அவசியம் .
அப்படி செய்வதால் நமக்கும் மனநிறைவு கிடைக்கும் . பயனாளிகளும் மகிழ்ச்சிஅடைவர் . சிறுதுளி பெருவெள்ளம் என்பது போன்று நம் ஒவொருவரின் செயலால் மற்றவர்கள் ஈர்க்கப்பட்டு பலரும் அத்தகைய எண்ணமுடன் பணியாற்றிட முனைந்திடுவர் .
இந்த சமுதாயம் சீர்பெற ,முன்னற்றம் காண ,மறுமலர்ச்சி அடைய இதுவும் ஒரு வழியாகும் .
வந்தோம் , பிறந்தோம் , சென்றோம் என்றில்லாமல்வாழ்ந்தோம் அடுத்தவரும் வாழ்ந்திட என்பதுதான்எனது லட்சியம் ,விருப்பம் .
சிந்தியுங்கள் , செயல்படுங்கள் !
பழனி குமார்