தங்கைகாக என் தமிழ் நடை : கூட பிறக்காத...
தங்கைகாக என் தமிழ் நடை : கூட பிறக்காத உன்னை தங்கை என்று அழைப்பதற்கு முன்,அண்ணா என்று அழைத்த உன் கனிந்த சொல்லுக்கு நான் ஆயுள் அடிமை
நான் சொல்லும் சொல்லை மட்டும் கேட்க வேண்டும் என்று உன் அன்பு அதிகாரம் , உறவுக்கு நாமே பிரகாரம், பாசம் என்னும் உணர்வு தான் அதில் பரிவாரம்
நான் வளர்ந்து விட்டேன் என்று உணர்த்திய உன் தாவணி, அதில் இருந்து அண்ணனாகிய எனக்கு கூடுதல் பணி,
குருதி நிறம் போல நாம் மனம் மாறாத திறம்
எனக்கு அடிப்பட்டதை கண்டு நீ பதறிய கணம், உன் பாசத்துக்காகவே ஏங்கி காயங்களை வேண்டினேன் தினம், மாறும் காலம் வந்தும் மாறாது நாம் மனம்,
சில விசயத்தில் என் பிடிவாதத்தனத்தை எனக்கு உணர்த்தி, சில அறியாமையை என்னுள் நீ செய்கிறாய் பூர்த்தி, என்றும் குறையாது என்னுள் தங்கையின் கீர்த்தி,
என் பிறந்தநாளை நீ கொண்டுவதானாலே நான் பிறந்ததை பாக்கியம் என்கிறேன், இதனை வைத்தே பல வாக்கியம் அமைக்கிறேன்
நான் உன்னை கைநீட்டி பலமுறை காயப்படுத்திய போதும், பாசத்தையே நீ திருப்பி தந்ததே போதும்
உன் மணக்கோலத்தைக் கண் முன் மகிழ்ந்தும், பிரிகிறாய் என்பதை நினைத்து என்னுள் கண்ணீருடன் என் ஆசிர்வாதம்
கூட பிறக்காத தங்கை எனக்கு இல்லை என்று எண்ண வைக்காத அளவுக்கு உன் பாசம், இது போன்ற உறவைப் பிரிந்தாலே எனக்கு தோஷம்,
மலர்களில் நீ வாடாமலர், அண்ணா என அழைக்க மாட்டார்களா? என்று பலர்,தங்கை இருந்தும் மதிக்க தெரியாத சிலர்
பல பிறவி எடுத்தாலும் நான் நானாக, நீ என் உடன் தங்கையாக வேண்டும் .
அண்ணா என்ற சொல்லில் ஆயிரம் போதை தங்கையின் சொல்லே வாழ்வில் கீதை, இதை அறிந்தவனே மேதை, இதை தவறாக நினைப்பர்கள் அனைவரும் பேதை, --வாடிப்பட்டி சரவணா