தமிழ் இதிகாசங்கள் இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம்...
தமிழ் இதிகாசங்கள்
இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்(Pre-historic Period). இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும்.
இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.
நில உடமைச் சமுதாயம் ஒரு காலகட்டம் வரை இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறி செல்லும்போது அதன் பரிணாமங்கள், நிகழ்வுகள், மாறுதல்கள்,அனைத்தும் வாய்மொழியாக ஒருகாலகட்டம் வரையிலும் குருவின் மூலமாக சீடர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டு, செவி வழிச் செய்தியாக சில காலம் வரையிலும் இருந்து சமுதாய பரிணாம வளர்ச்சியை தனதாக்கிக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகள் கால ஓட்டத்தையும், அதன் சமூக நியதிகளை இதிலிருந்து எடுத்து மேற்கோள்கள் காட்டிடவும், நீதி சொல்லவும், சமுதாய சட்டங்களாகவும் காலத்தை கடந்தும், தெளிவாகவும், எளிமையாகவும், சிக்கலான, நெருடலான, மனிதகுலச் சிந்தனைகளை உள்வாங்கி, உயர்ந்து நிற்கிற வரலாற்றுப் பெட்டகமே இதிகாசமாகும்.