அனுபவத்தின் குரல் - 25 ------------------------------------- நாட்காட்டி (...
அனுபவத்தின் குரல் - 25
-------------------------------------
நாட்காட்டி ( Calendar ) அன்றைய தேதி கிழமையை மட்டுமே காட்டவில்லை .அதன் மூலம் உணர்த்துவது நம்மை கடந்து செல்லும் காலம் மற்றும் குறைகின்ற நமது ஆயுளையும் சேர்த்து தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வாழ்ந்த காலத்தை கணக்கிட முடியும் ஆனால் வாழப் போவதை அறிந்து கொள்ள முடியாது.
ஆகவே வாழ்ந்து முடிந்த காலத்தில் நாம் என்ன செய்தோம் என்பதை நினைத்து பார்ப்பதை தவிர்த்து , இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பகுத்தறிந்து தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ப நமது வாழ்க்கையை வகுத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.
விந்தைமிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தும்கூட , இன்னும் வறுமைக்கோடு என்று ஒன்றும் ஏழைகள் என்ற ஒரு இனமும் இருக்கவே செய்கிறது என்பதை எவரும் மறுக்கவும் முடியாது. அந்த இனத்தை அடியோடு வேரறுக்கும் பணியை நாம் தொடர வேண்டும் என்பதை மறக்கவும் கூடாது.
மனித இனத்தில் சாதி வேறுபாடும் ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடும்முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சமதர்ம சமுதாயம் மலரவேண்டும்.
இணைந்து பாடுபட்டால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும். வெற்றியும் காண முடியும்.
பழனி குமார்