எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேலியே பயிரை மேய்வதா ?*******************************************இன்று தமிழக மீனவர்களைஇந்திய கடலோர...

nbsp வேலியே

  வேலியே பயிரை மேய்வதா ?
*******************************************

இன்று தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையே 
துப்பாக்கியால் சுட்டதாக செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது .இன்று அனைத்து தொலைகாட்சிகளில் விவாதங்கள் நடந்தததை காணும் போது 
இதயம் வலிக்கிறது .தமிழனுக்கு, குறிப்பாக நமது மீனவர்களுக்கு என்றும் எதிராகவும் நடக்கிறது நிகழ்வுகள் .அவர்களின் .உயிரின் பாதுகாப்புக்கு 
உத்திரவாதம் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது .

அதுமட்டுமின்றி அங்கும் மொழி பிரச்சினை எழுந்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது .

ஒரு பாதிக்கப்பட்ட மீனவர் தன்னை தமிழில் 
பேசக்கூடாது என்று கடலோர காவல் படை 
அதிகாரி ஒருவர் கூறியதாக சொல்வதை 
நான் தொலைக்காட்சியில் கேட்கும்போது 
அதிர்ச்சியாகவும் உள்ளது .

என்றுதான் விடியுமோ நமது தமிழக மீனவர்களுக்கு ?

மத்திய மாநில அரசுகள் தான் பதில் கூற வேண்டும் .

( சற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்படபேசுவில் விவாதங்களை கண்டவுடன் என் மனதில் எழுந்த எண்ணங்கள் இது )


பழனி குமார் 
14.11.2017  


Rate Up 0 Rate Down 0
Close (X)

நாள் : 14-Nov-17, 10:08 pm
மேலே