"அப்பா" யாரும் காணாத கருவறை தாயின் கர்ப்பபை.. நான்...
"அப்பா"
நான் கருவறை எனக் கண்டேன் என்னை சுமந்த உன் கண்களை..!
உன் கால்களை தொட வந்தேன் அது பாவம் எனக் கூச்சலிட்டாய்..
அந்த பாவம் தீர்க்கவோ இன்று நீயும் உன் மூச்சை விட்டாய்..?
இறுதியில் விழுந்து கிடந்தேன் உந்தன் காலடியிலே..
என்னை சுமந்த கருவறையும் இன்று கல்லறையிலே..!!