எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 53 --------------------------------​------- ​நமது உடல்நலத்தை...



​அனுபவத்தின் குரல் - 53 

--------------------------------​-------


​நமது உடல்நலத்தை பாதுகாக்க தேவைப்படும் அடிப்படை அம்சங்களில் முக்கியமான ஒன்று சுகாதாரமான சுற்றுச்சூழல் ஆகும் . ​அதன்பிறகுதான் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் மற்றும் அமைதியுடன் மகிழ்ச்சி நிறைந்த மனநிலை ஆகும் . இவையனைத்தும் ஒன்றுசேர்ந்து நிலைத்தால் நமது உடல் சீராக இருப்பதுடன் நீண்ட காலம் வாழலாம் என்பது நமது முன்னோர்கள் வாழ்ந்த  வாழ்க்கை முறையை வைத்து நாம் அறியலாம் . அதையே சென்ற தலைமுறை வரை தொடர்ந்து கடைபிடித்த நாம் ஒரு நேரத்தில் காலத்தின் மாற்றத்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அயல்நாட்டு நாகரீக மோகம் தொற்றி கொண்டதாலும் அவசர உணவு ( Chat items ) முறை நம் நாட்டிலும் நுழைந்து இன்றைய நிலையில் முழு ஆதிக்கம் செலுத்துகின்ற இடத்தில் வந்து அமர்ந்துவிட்டது . குறிப்பாக இளைய சமுதாயம் நமது பழைய உணவு வகைகள் பிடிக்காமல் வெளிநாட்டு உணவு முறைகளை தேடி ஓடுகின்ற நிலையே ஏற்படுகிறது . 


ஆனால் இதனால் யாருக்கு என்ன பயன் என்பதை அனைவரும்  சிந்திக்க வேண்டும். மேலை நாடும் நம்நாடும் அனைத்து துறைகளிலும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . மேலும் அயல்நாடுகளில்  விற்கப்படும் எந்த பொருளும் தரமிக்கதாகவும் , புதியனவாகவும் , சரியான அளவுள்ளதாகவும் இருப்பது காரணங்கள் ஆகும் . அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது தரத்தில் குறைந்தும் , போலியானதாகவும் ( Duplicate ) கலப்படமுள்ள பொருளாகவும் இருக்கும்போது நமது உடலில் சென்றவுடன் பலவித மறைமுக ஏதிவினையை உண்டாக்குவதால் உடல்நலம் விரைவில் நாம் அறியாமல் கெடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது . அந்த காலத்தில் நமது முன்னோர்  நீராகாரமும் பழைய சாதம் மட்டுமே சாப்பிட்டு நாள் முழுவதும் கடுமையாக உழைத்ததையும் , இறுதிவரை எந்த நோயுமின்றி வாழ்ந்தார்கள் என்பதை அனைவரும் தெரிந்த ஒன்று. 


மேலை நாடுகளுக்கு ஈடாக நமது சுற்றுப்புறத்தை சீராகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க நினைக்க வேண்டுமே தவிர , அவர்கள் உணவை பின்பற்ற வேண்டும் என்பதில் மட்டும் விருப்பமாக இருக்க கூடாது. அவர்கள் நாட்டின் சீதோஷ்ண நிலை , நடைமுறை பழக்க வழக்கங்கள் போன்று அனைத்தும் மாறுபடும் . அதற்கேற்ற உணவை அவர்கள் உட்கொள்ள நேரிடுகிறது . நம் வாழ்க்கை முறையே வேறு . நமது கலாச்சாரம் , பண்பாடு , நடைமுறைகள் வேறு. நவீனம் என்ற மோகத்தால் , விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரால் , காலத்தின் சுழற்சி என்று பேசிக்கொண்டு நாமே நமது உணவு முறையை மாற்றிக்கொள்ளுதல் என்பது நாமே அறிந்து விஷம் கலந்து உண்ணுவதை போன்றதுதான் . குறிப்பாக வளரும் தலைமுறையும் இளைய சமுதாயமும் இதை உணர வேண்டும் . 


நாகரீகம் என்ற பெயரில் , முன்னேற்றம் என்ற மாயையில் நாமே நமது கலாச்சாரத்தை , பண்பாட்டை , நடைமுறை வாழ்க்கையை சீரழித்தால் நமது இனத்தின் நாட்டின் பெருமையும் அழிந்துவிடும் .அதற்கு நமது தலைமுறை காரணமாக இருந்திடல் கூடாது . உங்கள் நலனுக்காகவே இதை கூறுகிறேன் எனது அனுபவத்தின் வாயிலாக . 

    
​​பழனி குமார் 
                       

நாள் : 20-Dec-17, 7:14 am

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே