எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 55 ------------------------------​------ இன்று Facebook...




​அனுபவத்தின் குரல் - 55 

------------------------------​------


இன்று Facebook ல் நண்பர் ஒருவர் ஒரு காணொளி ​ ( video ) ​காட்சியைப் பகிர்ந்துள்ளார். நானும் அதை அனைவருக்கும்  share செய்தேன். அதில் ஒரு உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரி கல்லூரி ஒன்றில் திரளாக கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய காட்சியது. ஏற்கனவே அவர் மக்கள் மிகவும் விரும்பும் மதிக்கும் ஆற்றல் மிக்க அதிகாரி.​ ​அவர் தன்னுடைய அனுபவத்தையும் வாழ்வில் படிப்படியாக அடைந்த முன்னேற்றம் பற்றியும் கூறிவிட்டு மேலும் சில அறிவுரைகளை பொதுவாக பேசியிருந்தார் அந்த நிகழ்சசியில் . மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு விழிப்புணர்வு பிறந்திடும் வகையிலும் பேசினார் . 

அதில் ஒன்று , அவரது வெளிநாட்டு பயணத்தின் போது நண்பர் ஒருவர் வீட்டில் தங்க நேர்ந்ததையும் அவருடன் உரையாடியதையும் குறிப்பிட்டு கூறினார் . அவர் தமிழ்நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து ஒரு மருத்துவராகி இன்று வெளிநாட்டில் நல்ல நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினார் . அப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அந்த காவல்துறை அதிகாரி அந்த வெளிநாடுவாழ் இந்தியரிடம் நம் தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு பல்லாயிரக் கணக்கில் பொறியாளர்களாக ( Engineers ) படித்து முடித்து பட்டத்துடன் பலவேறு துறைகளில் வெளிவந்தாலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதிலலை அதிலும் மிக குறைவான அளவே உங்களைப்போல வெளிநாடுகளில் வேலைசெய்ய வாய்ப்பும் கிடைக்கிறது . நல்ல நிலைக்கு வர முடிகிறது . அது எனக்கு வருத்தமாக உள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும் அதற்கு அவர் கூறிய பதிலையும் கூறினார் . 


படித்து பட்டம் பெறுகின்ற அனைவரும் முடித்தவுடன் பட்டம் வாங்கிய சான்றிதழ் மட்டுமே வைத்துள்ளனர் . ஆனால் அதில் எத்தனை பேர் தான் படித்த துறை சம்பந்தப்பட்ட அறிவோடு திறனோடு இருப்பார்கள் என்று நம்புகிறீர்கள் . பொறியாளர் பட்டம் மட்டுமே வைத்திருப்பர் ஆனால் அதில் ஆழ்ந்து அறிந்து புரிந்து தனது திறமையை வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்கள் . B E / B Tech பட்டம் மட்டும் உதவாது . செயல்திறனும் அந்தந்த துறையில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர்களாக அமைந்திட வேண்டும் . அப்போதுதான் அவர்கள் வாழ்வில் ஒளிர முடியும் கற்றதன் பலனையும் பெற முடியும் . நமது நாட்டு கல்வி திட்டங்களும் சரியான முறையில் இல்லை . அதை அனைவரும் உணர வேண்டும் என்றதும் அந்த காவல்துறை அதிகாரி அவரின் பதிலில் உள்ள உண்மையை சிந்திக்க தொடங்கியதாக கூறிவிட்டு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பார்த்து நீங்கள் இந்த உண்மையை உணர வேண்டும் . பட்டங்கள் மட்டுமே பெற வேண்டும் என்ற நோக்கமில்லாமல் அந்தந்த துறையில் முற்றும் அறிந்தவர்களாக , அதை செயற்படுத்தும் திறனோடு ஆற்றலோடு ஒரு சக்தியாக திகழ்கின்ற அளவிற்கு கல்லூரியை விட்டு வெளியே வரவேண்டும் . அப்போதுதான் உங்கள் வாய்ப்பும் கிடைக்கும் , நல்லவொரு பாதையில் பயணிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றார் . 


உண்மையில் இன்றைய மாணவர்கள் , இளைய சமுதாயம் உணர வேண்டிய ஒன்று .

     

  பழனி குமார்               



         




 


நாள் : 23-Dec-17, 8:47 am

மேலே