தலைப்பு : என் பள்ளி வாழ்கை . என்...
தலைப்பு : என் பள்ளி வாழ்கை .
என் பெயர் விஜய பிரியா.என் தோழிகள் மற்றும் என்னுடன் சேர்ந்து ஐந்து பேர் .என்னது தோழிகளுக்கு என்னை மிகவும் பிடிக்கும் .நாங்கள் 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்து வந்தோம் .எங்கள் வகுப்பறையில் நாங்கள் ஐந்து பெயர் மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் .என்ன நடந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக படித்து வந்தோம் .சிறு சிறு சண்டைகள் மற்றும் சில மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஓரிரு நாட்களில் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக வளர்த்தோம்.எங்கள் பள்ளி நாட்களில் எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் ,நல்லது நடந்தாலும் அதுக்கு முதல் காரணமாகவும் முனிடத்திலும் நானும் எனது தோழிகளும் இருந்து வந்தோம்.இதில் சிறு காதல் கதைகள் வேறு என் தோழிகளுக்கு . எப்படியோ 10 ஆம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பு தொடங்கியது அந்த நேரத்தில் தான் எங்கள் 10 ஆம் வகுப்பு கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியைகள் எங்களிடம் மிக நெருங்கிய நண்பர்கள் போல் பழக ஆரம்பித்தனர்.இவர்கள் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகுவார்கள் எனக்கு ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் .இப்படியே 11 ஆம் வகுப்பு முடித்து 12 ஆம் வகுப்பு தொடங்கியது என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது .என் வாழ்க்கையில் புது தோழி ஒருத்தி அறிமுகம் ஆனால் .அப்போது இதுவரை எனக்கு பிடித்த மற்றும் என்னிடம் பேசி பழகி விளையாண்ட என் தோழிகள் மற்றும் என் ஆசிரியர்கள் என்னை விட்டு விலக தொடங்கி விட்டார்கள் .அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை .ஒரு பக்கம் எனக்கு மிகவும் பிடித்த நீண்ட நாள் பழகிய உறவுகள் மறுபக்கம் என் புதிய தோழி .இது வரை என் பள்ளி வாழ்க்கையில் இருந்த அணைத்து சந்தோஷங்களும் என்னை விட்டு விலகி சென்றன .முடிவில் என் மனதை புரிந்து கொண்ட என் தோழிகள் என்னை விட்டு சொல்லாமல் நீ சந்தோசமா இருந்தால் போதும் என்றும் என்னை சந்தோசமா வைத்து கொண்டனர் .இறுதியில் எங்கள் பள்ளி வாழ்கை முடிந்து ஒவ்வருவரும் ஒவ்வரு பக்கம் சென்று விட்டோம் .இருந்தும் எங்கள் பாசம் எப்போதும் குறையாமல் எங்கள் வால் நாளில் ஒரு நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கு .
குறிப்பு : நண்பர்கள் கிடைப்பதல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
என் நண்பர்கள் எனக்கு கிடைத்த வரம் .