எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 56 ---------------------------------------------- பொதுவாக சமுதாயத்தில்...


​அனுபவத்தின் குரல் - 56 

----------------------------------------------

பொதுவாக சமுதாயத்தில் ஒரு பேச்சு உண்டு. பல குடும்பங்களில் இதுபோன்ற வசனங்கள் எழுவதை கேட்டுள்ளோம். அதாவது அவர்கள் வீட்டு பிள்ளைகளை பற்றி கூறும்போது எங்கள் பையன் ரொம்ப நல்லவன். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில கெட்டவர்கள் சேர்க்கையால் அல்லது சேரக்கூடாத நட்பால் இவனும் கெட்டுவிட்டான். இது அடுத்தவர்களிடம் தனது பிள்ளைகளை விட்டுக் கொடுக்க மனமின்றி மிகவும் உயர்த்தி பேசுவார்கள். இது இயற்கை .


இதனை போலி கெளரவம் என்பதா தன்னைத்தானே அவர்கள் ஏமாற்றி கொண்டு அடுத்தவர்களையும் ஏமாற்றும் நிலைதான். அதனால் யாருக்கு என்ன பயன். 
ஒருவர் சீரழிவதற்கு காரணமாக அடுத்தவரை குறை கூறுவது முற்றிலும் தவறு. அதுவும் பல காரணங்களில் ஒன்றாக கூட இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் முழுமையான காரணமாகாது. அதற்கு அடிப்படை காரணம் அவரவர் தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் பண்பற்ற மனம் தான். 


ஆகவே எவர் ஒருவரும் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்ய வேண்டும். தமது குறைகளை கண்டறிந்து திருத்திக் கொள்ள வேண்டும். அதனால் அவர் மட்டும் நல்லவராக மாற முடியும். இந்த சமுதாயத்திலும் பல நல்ல செயல்களை ஆற்றிட முடியும். தனிப்பட்ட ஒவ்வொருவரும் இவ்வாறு மாறுவதால் சமுதாயத்தில் மாற்றம் நிகழும். இது வீட்டிற்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது. 


சிந்திப்பீர் செயல்படுவீர். 
  

     பழனி குமார்               

நாள் : 24-Dec-17, 2:37 pm

மேலே