எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து..! பேசு ம் திறனிலாக் குழவியைப் பேசவைப்பான்.....

கிறிஸ்துமஸ் வாழ்த்து..! 




பேசும் திறனிலாக் குழவியைப் பேசவைப்பான்..

..........பேசாமல் தன்கையதன் தலையில் வைத்தே.!

பாசுரம் பாடுவோரைப் பரஸ்பரம் நேசிப்பான்..

..........வாசமிலா மலரையும்கூட மணம் வீசவைப்பான்.!

சாசுவதம் செய்வதையும் சமமாகச் செய்பவன்..

..........சிலுவையில் மரித்தாலும் மனம் அகலாதவன்.!

தூசுக்கும் ஒப்பாதாம் அவனைத் துயரத்தில்..

..........துன்புறுத்திய செயலனைத்தும் நீர் அறிவீரே.!

ஆசுகவி ஆவ தற்க்குமவன் அருள்புரிவான்..

..........ஆசைமிகு தமிழையே சிந்தனை செய்வோரை.!

வீசுமவன் புனிதப்பிறப்பின் புகழ் வாசத்தை..

..........வெவ்வேறு மொழியிலும் கொண்டாடு வருலகில்.!

ஈசுவரனல்லா புத்தர் மகாவீரர் எனும்வழியில்..

..........ஏசு பிரானுமொரு அன்பினடையாளத் தூயோன்.!

================================================


‘Merry Christmas’ in different Languages::

Joyeux Noel! French (France) Buon Natale! Italian (Italy) Frohe Weihnachten! German (Germany, Austria, Switzerland) Feliz Navidad! Spanish (Spain and Gibraltar, Mexico and Central America; South America) Nollaig Shona Dhuit! Irish (Ireland) Christmas in Dulbin (Picture: Getty) Boas Festas! Portugese (Portugal) Zalig Kerstfeest! Dutch (Belgium) Prettige Kerstdagen/ Zalig Kerstfeest! Dutch (Netherlands) Wesolych Swiat Polish (Poland) Gezuar Krishlindjet! Albanian (Albania) Eftihismena Christougenna! Greek (Greece) Sretan Bozic! Croatian (Croatia) Craciun Fericit! Romanian (Romania, Moldova) Merii Kurisumasu! Japanese (Japan)  

நாள் : 24-Dec-17, 4:55 pm

மேலே