என் வாழ்க்கையில் ஒரு காதல் கதை : என்...
என் வாழ்க்கையில் ஒரு காதல் கதை :
என் பெயர் பிரியா .அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு காதல் கதைகள் வந்து போகும் அது போல் என் வாழ்க்கையிலும் வந்தது .பொதுவாக ஆண்கள் தான் இது போன்ற கதைகள்
சொல்லுவாங்க ஆனால் இது ஒரு பெண் எழுதுகிற கதை .
அவன் பெயர் வருண்,
நான் என் கல்லூரியில் 2 வது வருடம் படிக்கும் போது என் வகுப்பறையின் பக்கத்துக்கு வகுப்பறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தான் வருண் .வருண் அழகா இருப்பான் .
நான் செல்லும் வழிகளில் எல்லாம் எங்காவது நின்று என்னை பார்ப்பான் வருண்.
ஒரு சில நாட்களுக்கு பிறகு அவனது நண்பர்கள் நான் அவன் வகுப்பறை வழியாக செல்லும் போதெல்லாம் அவன் பெயரை வைத்து என்னை அழைத்து வந்தனர் .
நீண்ட காலமாக என்னைத்தான் இப்படி அலைகிறாள்கள் என்று எனக்கு தெரியவில்லை .
ஒருநாள் வருண் கல்லூரிக்கு வரவில்லை.
அவன் அவன் நண்பர்களிடம் என்னை காதலிப்பதாக கூறி இருக்கிறான் .
அவன் வராத அந்த நாள் அவனது நண்பன் என்னிடம் வந்து .
"வருண் உன்னை காதலிக்கிறான்" என்று கூறி சென்று விட்டான்.
நானும் அவன் கூறியதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை .
மறுநாள் வருண் கல்லூரிக்கு வந்தான் வழக்கம் போல் அவன் வகுப்பறையின் வாசலில் நின்று என்னை பார்க்கும் வேலையை தொடங்கினான்.
இப்படியாக இரண்டு வருடங்கள் கடந்தன .நானும் எனது படிப்பை முடித்து விட்டு கல்லூரியை விட்டு வெளியில் பணிக்கு வந்து விட்டேன்.
வருண் பற்றிய எந்த தகவலும் 2 வருடமாக இல்லை .பின் வருணின் நினைவுகள் மறக்க தொடங்கினேன் .
இந்த இரண்டாவது வருட முடிவில் வருணிடம் இருந்து fb இல் friend request வந்தது.
நானும் அதை ஏற்று கொண்டு நல்ல நண்பராக பழகி வந்தோம் .
நாங்க நண்பர்களாக இருக்கும் போதும் , பேசும் போதும் அவன் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி விளையாடுவான் .
ஒருநாள் நன்றாக பேசி கொண்டிருக்கும் போது வருண் ,
"பிரியா உன்னை நான் காதலிக்கிறேன்" என்று கூறினான் .
நான் என் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு வருணிடம் ,
"வேண்டாம் வருண் நாம் நண்பர்களாகவே வாழ்ந்து விடுவோம்" என்றேன் .
அப்போது ,சிறிது கோபத்தில் ஈடுபட்ட வருண் .
"ஏன் என்னை வேண்டாம் என்கிறாய் , இதற்கு தான் 2 வருடமாக காத்திருந்திருந்தேனா " என்று அல தொடங்கி விட்டான்.
எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை நானும் சில நாட்கள் வருணிடம் பேச வில்லை.
இப்போது வருண் என் சமதத்திற்காகவும் ,என் குடுத்து சமதத்திற்காகவும் காத்திருக்கிறான் .
நானும் அவனிடம் பேசுவதில்லை.அவனும் என்னிடம் பேசுவதில்லை .
இறுதிஇல் எங்கள் மனம் ஒன்று சேரும் என்ற நம்பிக்கையில் இருவரும் இருக்கிறோம்.
தொடரும்...
Note : பெற்றோரின் ஆசீர் வாதமே கடவுள் கொடுத்த வரம்.