எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 57 ************************** உலகம் முழுவதும்...


​அனுபவத்தின் குரல் - 57 
************************** 


 உலகம் முழுவதும் பொதுவாக ஆங்கில புத்தாண்டு மட்டும் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது.  நாம் அனைவரும் நாள் தேதி அனைத்தும் குறிப்பிடுகிறோம். வருடத்தின் முதல் மாதம் ஜனவரியையும் கடைசி மாதமாக டிசம்பரையும் வைத்துள்ளோம் உலக வழக்கின்படி.


 
இத்தனைக்கும் நமது நாட்டில் மொழிவாரியாக புத்தாண்டு தினம் அனுசரித்து வந்தாலும் ஆங்கில புத்தாண்டு தான் எல்லோரும் பின்பற்றி வருகின்றனர். இதில் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. அடுத்து வரும் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏதாவது ஒரு பழக்கத்தை அல்லது கொள்கைகளை மாற்றி விடுவது அல்லது கைவிடுவது என்று முடிவு செய்வார்கள். அது அவரவர் தனிப்பட்ட உரிமை விருப்பம். நான் குறைகூற விரும்பவில்லை. 



ஆனால் நான் நினைத்துக் கொள்வது இது போன்ற முடிவுகள் எடுத்திட அல்லது  செயல்களை ஆற்றிட  நாம் எப்போது வேண்டுமானாலும் நினைத்தாலும் செய்திட முடியும். பிறகு எதற்காக இந்த வருடத்தின் முதல் நாளன்று தான் என்று கூறுகிறார்கள். எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது. நமது மன உறுதியில் தான் உள்ளது. 


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பலர் அந்த முடிவை எந்த அளவுக்கு இறுதி வரை கையாள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சிலர் சில நாட்களில் அல்லது மாதங்களில் அதை கைவிடுவதும் உண்டு. இதை குறிப்பிட்டு சொல்வது கேலிக்காக அல்ல. நடப்பதை தான் கூறுகிறேன்.
எந்த ஒரு முடிவு அல்லது செயலை செய்திட நாள் கிழமை நேரம் காலம் எதுவும் தேவையில்லை.



 நமது மனநிலை மற்றும் சூழ்நிலையும் காரணம். எதையும் பகுத்தறிந்து சிந்தித்து செயல்பட்டால் நாம் எண்ணுவது நிறைவேறும். நல்ல முடிவுகள் எட்டப்படும் என்பது எனது அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். 
  
பழனி குமார்               

         

நாள் : 26-Dec-17, 9:22 pm

மேலே