எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலை தெரிக்க ஓடினேன் ஒரு ஊர் என்றால் அதற்கு...

தலை தெரிக்க ஓடினேன்

  

                     ஒரு ஊர் என்றால் அதற்கு பெயர் ஒன்று இருக்கும் அல்லவா. தெரியாதவர்கள் அந்த ஊருக்கு சென்றால் எப்படி கண்டுப்பிடிப்பது கூறுங்கள். ஊருக்கு வெளியே பெயர் பலகை வைத்து இருப்பார்கள் அதை வைத்து கண்டுபிடிக்கலாம். அதே போல நானும் ஒரு ஊருக்கு சென்றேன். அந்த ஊரின் பெயர் எனக்கு தெரியவில்லை. பலகையில் பார்க்கலாம் என்று பார்த்தால் அந்த பலகை பாதி அழிந்தும் அழியாமலும் பெயர் தெரிந்தும் தெரியாமலும் பாதியுடன் காணப்பட்டது.       
                                 இதையும் தாண்டி ஊருக்கு போகலாம் என்று நடந்தேன். நடப்பாதையானது மண்சாலை அதுவும் தொடர்சாலை தொலைதூரத்தில் வரைக்கும் செல்கிறது அந்த பாதை. அந்த பாதையில் ஒரே ஒரு மரம் மட்டும் தான் தெரிந்தது. மற்ற மரங்கள் காணவில்லை. அந்த மரம் பெரியளவில் இலைகள் காய்ந்தும் போகவில்லை ,பசுமையாகவும் இல்லை.         அந்த மாலைநேரத்தில் சிறிது காற்று கூட வீசவில்லை. மரத்தில் இலைகள், கிளைகள் தவிர வேர ஏதுமில்லை.சிறிது சத்தமில்லை. நான் தனியாக நின்றேன். அப்போது சூழ்நிலை பாடல் தெரியுமா!        ’’’’தனிகாட்டில் தனிமை வந்தததே’’’’’என்ற யுவன் சக்கர் ராஜா பாடல் தான்.      
                                   மாலைநேரத்தில் தனிமையில் நடக்கிறேன். யாரா இருந்தாலும் அச்சம் இருக்கும். மரம் ஒன்று கூறினேன் அல்லவா. அந்த மரத்தை நோக்கி நடந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு ஒருவம் தெரிந்தது. அது என் கண்களுக்கு திருஒருவம் போல காண்பிக்கப்பட்டது. ஆனால் என்ன ஒருவம் தெரியவில்லை. காரணம் என் வயது அப்படி. என்ன வயதா! 20 தான். இந்த வயதில் அவ்வளவு கண் தெரியாது.எதாவது ஒரு பெண்ணை பார்த்தால் போதும் கண்களை கடன் வாங்கி கூட பார்ப்போம்.          கூர்ந்து கவனித்தபோது அது பெண் ஒருவம். எனக்கு மனம் ஆருதல் படுத்தி நடந்தேன். அந்த பெண்ணிடம் இது எந்த ஊர் என்று கேட்கலாம் என்று நெருங்கி செல்ல முயற்சித்தேன். மரத்தை தாண்டி சென்றேன். இப்போது நன்றாக தெரிந்தது அவள் ஒருவம். எப்படி இருந்தாள் தெரியுமா,.....           கூந்தல்,...அப்படி ஒரு கூந்தலை இந்த காலத்து பெண்கள் வைத்து இருந்தால் அவ்வளவு தான் அவர்களை கையால் பிடிக்க முடியாது. சின்ன கூந்தல் வத்து இருப்பவர்களே வெளியே செல்ல வேண்டும் என்றால் நேரமாகிறது. இவள் வெளியே செல்வதற்கு முன் நாளே கேளம்ப வேண்டும். அவ்வளவு நீளமான கூந்தலை உடையவள். தலை வாரவில்லை. முடி கலைந்து இருந்தது. 4 நாட்களாக வரவில்லை போல.     அவள் உடை சட்டை பாவடையும், தாவணி மாதியும்   இல்லை. இவற்றை கலந்து அணிந்து இருந்தால், அதன்                  
                                 நிறம் வெள்ளை துணியை மண்ணில் கீழே விழுந்து எழுந்தால் ஏற்படும் நிறத்தில் காணப்பட்டது. கைகளில் வளையல்கள் கிடையாது. அழகு சாதனப்பொருட்கள் பயன்படுத்தியது இல்லை. இப்படி ஒரு சாதாரணப் பெண்ணை பார்க்கனும் ஆர்வம் அதிகம்.      
                                   ஆர்வத்தை ஓரமாக போட்டுவிட்டு அவளை நோக்கி வேகமாக நடந்தேன். நெருங்கிவிட்டேன். அவள்மீது கை வைத்து திரும்பி பார்க்கலாம் என்று முயற்சித்தேன். அப்போது காற்று வீசாத இடத்தில் எங்கு இருந்தது தெரியவில்லை. மழை வருவதற்கு முன் வரும் காற்று வீசும் அல்லவா அப்படி வீசியது. என் கண்ணில் தூசி விழுந்தது. அதை துடைத்துவிட்டு பார்த்தால் காணவில்லை. சுற்றிலும் பார்த்தேன் காணவில்லை. சரி அப்படியை தொடர்ந்து நடந்தேன். என் கண்களுக்கு தொலைவில் ஒரு வீடு தெரிந்து அதன் அருகில் செல்ல நடந்தேன். வீட்டின் பக்கத்தில் மரம் ஒண்று இருந்தது. அருகில் சென்றபோது அவள் அங்கு பார்த்தேன்.                            
                                             எனக்கு அவளை பார்க்கவேண்டும் என்று பக்கத்தில் சென்றேன். அவள்மீது கைவைத்துவிட்டேன். யாராவது பின்புறம் கை வைத்தாள் என்ன செய்யவெண்டும் திரும்பி பார்க்கனும் தானே. ஆனால் அவள் திரும்பவிலலை.          அதற்கு அவள் என்ன செய்தாள் தெரியுமா!                               சிரித்தாள்,..................       
  அச்சம் என்றால் என்னனு எனக்கு தெரியாது. அவள் சிரித்தத்தை பயந்துவிட்டேன்.                   சிரிக்கிறாள்,..........       
 சிரித்துக்கொண்டு இருக்கிறாள்,...........       
 சிரித்துக்கொண்டே இருக்கிறாள் போல,........       
 நீ திரும்பவே வேணாம் என்று நான் திரும்பி ஓட ஆரம்பித்தேன். ஆனால் ஓடவில்லை. காரணம் கீழே விழுந்துவிட்டேன். விழுந்து ஓட ஆரம்பித்தேன். காற்று ஒரு புறம் பலமாக வீசியது.      
ஓடினேன்,.....
ஓடினேன்,.....
ஓடினேன்,.........  
           தொலைவில் அந்த மரம் தெர்ந்தது. வழி தவறாமல் தான் வருகிறேன் என்று ஓடிக்கொண்டு பார்த்தாள்! அந்த மரத்தில் ஏதே ஒருவம் நின்றுக்கொண்டு இருந்தது. அதை கூர்ந்து பார்த்தால் அது நிற்கவில்லை தொங்கி கொண்டுருந்தது.             
            ஒரு பெண் வெள்ளை நிறத்துணியுடன் தூக்கு தொங்கிறது. பயத்தில் கால்கள் ஓடாமல் நடுங்கியது. என்ன செய்வது என்று யோசித்தேன்.        கண்களை மூடி கடவுளை நினைத்து தலைதெரிக்க ஓடினேன்.    
    ’’’’”தெரிக்க விடலாமா’’’’’’’’’    
     மரத்தை கடந்து முதலில் வந்த இடத்திற்கே வந்தேன். மீண்டும் அந்த சிரிப்பு என்னை செருப்பாள் அடிப்பது போல சிரித்துக்கொண்டே வந்ததால் மீண்டும் தெரிக்கவிடலாம் என்று ஓடும்போது கல் தடுக்கி கீழே விழுந்து எழுந்தாள் வீட்டில் இருக்கிறேன். கனவு கண்டு கட்டிலில் இருந்து கீழே என் பாட்டியின் மீது விழுந்தேன். பாட்டி மீது விழுந்ததால் தொடக்கட்டையில் அடி வாங்கினேன்.
 நான் சிரித்துக்கொண்டே,..      
 ’’’’’மகிழ்ச்சி’’’’’’
என்று கூறிவிட்டு,ஓடிவிட்டேன்,............               

நாள் : 17-Jan-18, 9:16 am

மேலே