எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனவில் நியா! என் கனவில் ஒரு அழகிய தேவதை...

கனவில் நியா!   
       
             
                   என் கனவில் ஒரு அழகிய  தேவதை ஒருத்திய கண்டேன்.அவலுடன் கண்ட காதலை உங்களிடம் கூருகிறேன். படித்து பாருங்க எப்படி என் காதல். இதை கதை நான் ஏன் உங்களுக்கு கூருகிறேன் என்றால் இந்த காலத்தில் இப்படியும் ஒரு காதல் உள்ளது என்று நிருபிக்க தான்.  இந்த காதல் என் கனவில் நடந்தததை தான் கூற போகிறேன். இதில் உள்ள காதலை மட்டும் கூருகிறேன்.பின்பு மொத்தமாக கூருகிறேன்.                      
                               இது என் முதல் கனவு மட்டும் இப்போது சொல்ல ஆசை படுகிறேன்.என் காதல் கதையின் உதவி செய்தவர்கள் பற்றியும் அவர்கள் என் கனவு கன்னியுடன் எப்படி சேர்த்து வைத்தார்கள் என்றும் பின்பு கூருகிறேன் தற்போது என் கனவு தேவதை பற்றி கூற ஆசை படுகிறேன்.உதவி செய்தவர்கள் பெயர் தெரியுமா? தெரியது தான் ஏன் என்றால் நான் சொன்னா தானே தெரியும். அவர்கள்  தீனாஅஜித் என்கின்ற தல தான் மற்றும் மற்றொருவர்  ஷாஜகான் விஜய்  என்கின்ற தளபதி அவர்கள் பற்றி இப்போது சொல்ல மட்டேன் பின்பு  தான்.நான் தினமும் கல்லூரிக்கு சென்று மிண்டும் விட்டுக்கு வந்து உண்வு அரிந்துவிட்டு சிறிது நேரம் படித்துவிட்டு உறங்குவேன்.தினசரி மணி  9.30 என்றளவில் தூங்குவேன்.கனவில் வந்த அன்று நான் முன் உரங்கிவிட்டேன். கனவு கண்ட நேரம் 7.30.கனவில் பறந்து கொண்டு இருக்கிறென்.சிறகு இல்லாமல் வானத்தில் அழகை ரசித்து கொண்டு இருக்கிறென்.தம்பி பறந்தது போதும் கதைக்கு வா என்று சொல்றிங்க சரி சொல்ர என்னை மெய் மறக்க வைத்த கனவு தேவதை,கனவு கன்னி. வானத்தில் பறந்து முடித்துவிட்டு தரையில் இரங்கினேன்.நான் இரங்கிய பாதை மண்சாலை நீண்ட தொடர்  பாதை . சுற்றுசூழல் பார்த்தால் பார்ப்பதுக்கு இரண்டு கண்கள் பற்றாது அப்படி ஒரு அழகு.அந்த சூழலை பற்றி கூர வேண்டும் ஏன்னென்றால் அழகு என்பதை ரசிக்க தான் கடவுள் படைத்து இருக்கிறார்.அது மாலை பொழுது மணி  4-5 மணி இருக்கும். மாலை பொழுதில் மண் சாலையில் நீண்ட தொடர்பாதையில் ஒரு பெரிய மரம் ஒன்று என் கண்ணில் காணப்பட்டது. மற்ற மரம் எங்க என்று கேட்கலாம். என் கனவு அல்லவா    அப்படி கேட்க கூடாது. நான் சொல்வதை நன்றாக கேல்லுங்கள்  தொல்லை கொடுக்கும் தொல்லைபேசி தொடர்பே இல்லாத இடத்துக்கு வைத்துவிட்டு வந்து படித்து பார்க்கவும். பெரிய மரம் பசுமையாவும் பூக்கள் நிரம்பியும் காணப்பட்டது.பூக்கள் இருந்தால் அங்கு பறவையும் ,தேனீக்களும் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. அதை பார்த்து மயங்கியும் வியந்தும் நின்ரேன் நான்.ஏதோ ஒரு ஒலி ஒன்று கையிறு கட்டி இழுக்கிறது என்ன என்று பார்த்தால் தெரிவதும் போலவும் தெரியாதது போலவும் ஒரு மயங்கிய ஒருவம். உற்று கவனித்தால் அது ஒரு பெண் ஒருவம். கிட்ட செல்ல ஆரம்பித்தேன். அந்த ஒருவத்தை பின் தொடர்ந்து  நடந்து சென்றென். ஒரு அழகிய பெண் .நடந்து சென்ற நான்   நின்றென் மெய்மறந்து போனேன். கைபேசியை  கையில் வைத்து இருந்தேன்  கை தானாக படல் ஒன்றை பாட வைத்தது. அந்த படல் “அந்த சாலையோரம் ஒரு மாலைநெரம் ” என்ற ஆதி பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அவளை அழகை பற்றி சில வார்த்தைகள்.....             
                          எனக்கு முன் கனவு தேவதை நடக்க அவள் பின் நானும் நடக்க பாதை தொடர நானும் அவளை தொடர்ந்தேன்.பத்து வருடம் தவம் இருந்து கடவுளிடம் ஒரு தவம் வேண்டும் என்று கேட்பேன். என்ன வரம் தெரியுனுமா? அவள் அழகை பார்ப்பதுக்கு கண்கள் பற்றவில்லை அதான் கடவுளிடம் ஆயிரம் கண்களை  வரமாக  தர வேண்டும்.அவளுக்கு அளவுக்கு அதிகமாக அழகை கொடுத்துவிட்டார் என்ன பன்றது கடவுலும் காதல்  என்ற கதவு ஒன்றை திறந்து இருப்பார். எங்கும் பார்த்தாலும்  இருட்டாக உள்ளது சரி எனக்கு கண் தெரியவில்லை  என்று பார்த்தல் அது அம்மவாசை இருட்டில் எனக்கு கண் தெரியாமல் ஒரு பள்ளத்தில் விழுந்தேன் அப்போது வழிபறி திருடர்கள் ஒரு குடும்பத்தை அச்சத்தை உண்டாக்கி திருடி இருந்தனர்.எதற்க்கு இதை கூறினேன் தெரியுமா? அவள்  தலை மூடி அவ்வளவு கருமை இருக்கும். அந்த இருட்டில் 1000வாட் வெளிச்சம் போல தலயில் மல்லிகை பூ அதற்க்கு மேல் ஒரு அழகிய ரோஜா பூ  வைத்து இருந்தாள்.                           
                                        அந்த மல்லிகை பூவாசத்தில் மோகினி பேய் அவள் பாதுகாப்பிற்கு பின் செல்வது போல  அந்த வாசனையில் அளைகிறது. நீண்ட தலை மூடி கொண்டு நடந்து சென்றால் அவள் கூந்தல் அப்படியுமா இப்படியுமா ஆடியது.அவள் உடை தாவணியில் இருந்தால்  ஜாக்கிட் சிவப்பு  நிறத்தில் பச்சை நிறத்தில் தாவணியும் அணிந்திருந்தால் அவளின் நீண்ட தலை மூடி அவள் உயரம் விட அதிகமாக இருந்ததது. அதை பார்க்கும்போது சிறிது காற்று  வீசியது அப்போது அவள் இடை தாவணியில் சிறிது தெரிந்தது.இதை தவறாக  நினைக்காதிர்கள் ஏனென்றால் தவறாக  பார்க்கவில்லை இது உண்மை காதல்.அவள் இடையில் குழந்தைகள் சருக்கி விளையாடுகின்றார்கள் அப்படி ஒரு இடை.பாதி நிலவில் வளைவு எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அவள் அழகிய இடை.அதில் கருமை நிறத்தில் ஒரு சிறிய மச்ச்ம் ஒன்று இருப்பது என் கண்களுக்கு தெரிந்தது அது இன்னும் அழகை செர்த்தது.அவள் கைகள் மாநிறத்தில் காணப்பட்டது.நீல நிறத்தில் கைகளுக்கு எற்ற வளையல்கள்.விரல்களில் சிறிய மோதிரம் ஒன்று அணிந்து இருந்தால் அதுவும் நன்றாக இருந்தது.                      இப்படி ஒரு கூழலில் கனவு கன்னியுடன் மண்வாசம் நிரைந்த மண்சாலையில்   அவள் பின் நான் தொடந்து கொண்டுயிருந்தேன்.அவள் பசுமை நிரைந்த மரத்துடன் கடக்கும்போது மரத்தில் இருந்து பூக்கள் சிறிது சிறிதாக உதிர்ந்தது.அவள் மேலே விழும்போது அதை பார்க்கும் காட்சி சொர்கத்தில் சென்றது போல இருந்தது.ஆனால் என் மனதில் கவலை ஏனென்றால் பின் சென்றதால் தான் முன்னாடி பார்க்க முடியவில்லை அதான் கவலை. மண்வாசம் வீசும் சாலையில் பூக்கள் உதிர்ந்த சூழலில் அதுவும் மாலைநேரத்தில் தேவதையை பார்த்தேன்.அன்று அப்போது அந்த நொடியில் இருந்து காதல் அம்பு என் மார்புல் பாய்ந்தது.வலிக்கவில்லை  ஆனால் ரசிக்க ஆரம்பித்தேன் . கனவில் கனவு கண்டேன் அவளை பார்த்த நொடியில் மெய்மறந்தேன் நின்று கொண்டுயிருந்தேன் அப்போது ஒரு மழைத்துளி என்மீது விழுந்ததது. அவள் மீதும் விழுவதை பார்த்தேன் மரத்தின் கீழ் நின்றால் ஆனால் என்மீது குளிர்ந்த காற்றுடன் சேர்ந்த மழைத்துளி உடல் சிலிர்த்ததது.மழைத்துளி அதிகமாக விழுந்ததது. காற்றும் அதிகமாக வீசி அடைமழையாக மாறியது.இப்போது என் தேவதை கண் ஏதிரில் இருந்தும் பார்க்க முடியவில்லை அவ்வளவு மழை என்ன பன்றது சிறிது கூட தெரியவில்லை.                        செடியில் பூர்த்த பூவே உன்னை பரித்து வைத்த தேவதையின் முகத்தை காண்பிக்கமட்டாயா கடவுளே கூறுங்கள். தொலைவில் இருந்தவள் அருகில் சென்றேன். அவளை கடந்து அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்பதற்கு நான் என் நடப்பாதையை அதிகபடுத்தினேன்.எப்படி இருப்பாள் என்ற ஆர்வத்துடன் நடந்தேன்.ஆர்வம் அதிகமாகி காதல் சூழ்நிலையில் இருந்த நான் நகர சூழ்நிலை மாறியது. இப்போது அவளை கடக்க வேண்டும் என்பது தான் என் ஒரே குறிக்கோளக இருந்ததது. சரி சாலையில் முன் செல்ல வேண்டும் என்பதால் தெருவில் வந்த ஒருவரிடம் நிறுத்தி கடந்தேன். அவர் ஒரு பெரியவர் வாகனத்தில் வந்தவர் பொறுமையாக செல்வார் என்று நினைத்தால் தாத்தா தல அஜித் அலறும் வேகத்தில் ஓடியதால் காற்றில் கண்கள் கலங்கி தரையில் இருந்த என்னை பறக்க வைத்த அவளை தாண்டிவிட்டார். காற்றில் வேகமாக வீசியதால் பார்க்கவில்லை.அவருக்கு இரண்டு கை கோர்த்து நன்றி கூறிவிட்டு திரும்பி பார்க்கிறேன் காணவில்லை.எங்கே என் கனவு கன்னி,காதல் தேவதை காணவில்லை.என்று கவனித்து பார்த்தால் அங்கே ஒரு குருக்கு சந்து அதில் சென்றால்அவள். இப்படி சென்று பார்க்கலாம் என்று நடந்தேன்.அவளை பாத்துவிட்டேன் முகத்தை அல்ல அவள் நின்று இருந்தததை அவள் தோழியிடம் பேசிக்கொண்டுயிருந்தால் கடவுளுக்கு ஏன் என்மீது இந்த கொளவெரி என்று எண்ணினேன்.                                       கடவுளே இன்று  என் கனவில் பூர்த்த  காதல் பூவின் முகத்தை காண்பிக்கமாட்டாயா என்னடா இவன் அடிக்கடி கடவுள் கூறுகிறானே என்று எண்ணாதிர்கள். கடவுள் பக்தி சிறிது துளி குட இல்லை.கடவுளை நினைக்க வைத்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ரசித்த அழகையும் பார்த்தே வேண்டும் அப்படி பார்க்க முடியாமல் போனால் தூக்கம் தூக்குமாட்டி கொள்ளும்.                கண்கள் இல்லாதவருக்கும்  பார்வை தந்து  காதல் என்ற படகில் கடலில் நிந்தவைக்கும். அவள் தோழியுடம் பேசிவிட்டு நடந்தால் வேகமாக சென்று அவள் தோளின் கை வைத்து திரும்மி பார்க்கும்போது ஏதோ ஒரு குரல் டேய் டெய் என்று அது யாருடா என்று பார்த்தால் என் பாட்டி.கடைசி வைரைக்கும் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை.என் தேவதையின் பார்க்கவில்லை என்ற கடுப்பில் எழுந்தேன்.  பாட்டிக்கு பாடல் கேட்டு கொண்டு இருக்கிறாள். அதுவும் என்ன பாடல் தெரியுமா ஆங்கிலம் பாடல் கேட்டவுடன் அளவுக்கு அதிகமாக கோவம் வந்ததது.எங்காவது ஓரத்தில் வெற்றிலை போட்டு உரங்கமால் உயிரை எடுக்கிறது. என்னடா இவன் இப்படி கூறுகிறனே என்று எண்ணாதிர்கள். பாட்டி எப்போதுமே பாட்டி தான். அவர் கையில் சாதம் செய்து உருண்டை மாதிரி செய்து தறுவாள் அது எப்படி இருக்கும் தெரியுமா உங்களுக்கு நான் சொல்ல முடியுமா? காலையில் கடுப்பாகி கல்லூரிக்கு சென்றேன்.கல்லூரி முடித்துவிட்டு மீண்டும் விட்டுக்கு திரும்மினேன்.கனவு கண்டது போலவும் இருக்கு காணாததது போலவும் இருக்கு இன்று கனவில் அவள் வருவாளா!............                                                                

நாள் : 17-Jan-18, 9:21 am

மேலே