எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

....இந்திய குடியரசும் சுதந்திர இந்தியாவும்.... இந்தியாவில் இந்துத்துவமும் சாதியும்...

....இந்திய குடியரசும்
சுதந்திர இந்தியாவும்....

இந்தியாவில்
இந்துத்துவமும்
சாதியும்
மதமும்
ஒழிந்து..

சமத்துவமும்
மனிதநேயமும்
ஒற்றுமையும்
பகுத்தறிவும்...

என்று
பிறக்கிறதோ
அன்று தான்
உண்மையான
சுதந்திரம்...

குடியானவனும்
ஹரிஜனும்
எப்ப ஒன்னா
இருந்து பொண்ணு
கொடுத்து பொண்ணு
எடுக்குறாங்களோ
அப்ப தான் நிலையான
நிம்மதியான குடியரசு.....

இந்தியாடா...
இங்கே இந்தியர்களை விட
இந்துத்துவவாதிகளே
அதிகம் இப்படி இருக்க
எங்கே இங்கு சுதந்திரத்தையும்
குடியரசையும் எதிர்ப்பார்ப்பது.....

இஷ்டத்துக்கு கட்டண உயர்வு
சாப்பிட கூட தடை
தேவையில்லாத பரிட்சை
ஒழுக்கமில்லாத அரசு அதிகாரிகள்
ஊரமட்டுமே சுத்தும் தலைவன்
ஊழலில் குளிக்கும் போயஸ்
தர்மாக்கோல் அரசியல்வாதி
ஆண்டாள் வீதி போராட்டம்....

கிடைக்காத நீதி
நடக்கும் வன்புணர்வு
கொழுத்தும் குடிசைகள்
நடக்கும் ஆணவக்கொலை
கீழ்சாதி தீட்டு
மேல்சாதி ஆதிக்கம்
மத வெறியாட்டம்
சாதி படுகொலைகள்
குண்டுவெடிப்பு கலவரம்
இப்படி எல்லாம் சுதந்திரமாய்
நடக்கும் இந்தியாவில்
குடியரசையும் .
சுதந்திரத்தையும்
எதிர்பார்ப்பது தவறு
இருந்தாலும் பரவாயில்லை
என்று இந்நிலையையும்
கொண்டாட நினைப்பவனோ
அடி முட்டாள்
என்றே கருதிக்கொள்வேன்....

.##சேகுவேரா சுகன்....

பதிவு : cheguevara sugan
நாள் : 26-Jan-18, 2:02 pm

மேலே