படித்ததில் பிடித்தது நேற்று இரவின் காலையில் இந்தியா வல்லரசாகி...
படித்ததில் பிடித்தது
நேற்று இரவின் காலையில்
இந்தியா வல்லரசாகி இருந்தது.
சுவிஸ் வங்கியிலிருந்து
கறுப்பு பணம் திரும்பியிருந்தது!
இருந்தும்
உலக வங்கியிடம்
கடன் கேட்டுக்கொண்டிருந்தது!!
தனிக் குடித்தனங்களில்
விவாகரத்து வழக்குகள்…
காதல் போர்வைக்குள்
காம விளையாட்டுகள்…
அரசியல்வாதிகள்
தனி வங்கி ஆரம்பித்திருந்தார்கள்…
எல்லோர் கையிலும் துப்பாக்கி…
நீதிமன்றம்
மனித இன படுகொலைக்கு மாற்றாக
பறவை, விலங்கு சுட்டதற்கு
மரண தண்டனை விதித்துக் கொண்டிருந்தது…
திரைப்படம், தொலைக்காட்சி
ஆடையை முற்றும் துறந்த
நவீன கலாச்சாரத்தை
போதனை செய்து
‘நாமே குழந்தை
நமக்கேன் குழந்தை’ என்றது.
நான்
கலைந்த ஆடையை
உடுத்திக்கொண்டு எழுந்தேன்.