எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அல்சர், ரத்த சோகை பிரச்சனைகளுக்கு இளநீர் தேங்காயில் உள்ள...

அல்சர், ரத்த சோகை பிரச்சனைகளுக்கு இளநீர்

தேங்காயில் உள்ள நீர், இளங்காயாக இருக்கும்போது அதில் இருக்கும் மெல்லிய வழுவழுப்பான பொருள் நம் உடலில் உண்டாகும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை தணிக்கும், கண்கள் குளிர்ச்சி பெறும், பட்டினி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜீரணமாகவும், அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குவதில் இளநீர்முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீரை தினமும் மதியநேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீரை வெளியேற்றுவதுடன், ரத்த சோகையை போக்குகிறது. எனவே நோயற்ற வாழ்க்கைக்கு உகந்த உணவை சரியான முறையில் சரியான அளவு சாப்பிட்டால் அல்சர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை காரமான மற்றும் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை குறைத்துக்கொண்டால் அல்சருக்கு எளிதில் ‘குட்-பை சொல்லலாம்.

நாள் : 10-Apr-14, 5:53 pm

மேலே