எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பரதேசி சிறந்த படம் - நார்வே திரைப்பட விழா...

பரதேசி சிறந்த படம் - நார்வே திரைப்பட விழா

நோர்வேயில்நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கிய ‘பரதேசி’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா தேர்வாகியிருக்கிறார்.

சிறந்த நடிகைக்கான விருது ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக பாலாவும், சிறந்த ஒளிப்பதிவாளராக செழியனும், சிறந்த இசையமைப்பாளராக கடல் ‘மரியான்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்வாகியியுள்ளனர்.இந்த விருதுகள் வழங்கும் விழா நோர்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 27-ந் திகதி நடக்கவுள்ளது.

நாள் : 10-Apr-14, 6:04 pm

மேலே