ஊதா உடை உடுத்தி உண்மை அதை தன் பெயராய்க்...
ஊதா உடை உடுத்தி உண்மை
அதை தன் பெயராய்க் கொண்டோன்
இரு கண் பார்க்கும் கணக்கற்ற
பொருளற்ற பொருட்களைப் படைத்த அவனோ!
" ஏழு வர்ணத்தில் கோலமிட்ட வீட்டெதிரே
கருமை யொன்றே தன்னிரமாய் ஏந்திய
ஆறு உண்டு பலநூறு நுகர்ந்து
பல்லாயிரம் கண்டு அன்று மகிழ்ந்தவள்
வான்பறந்த காகமாய் தான் செழித்த
வளம் இருந்து நீங்கிய அடிநீர்
வற்றிய வறண்ட வீண்நிலம் நோக்கி
அக்னி வான் வேந்தனின் வீண்செயலால்
ஓலம் பொருந்திய அழகிழந்த தென்றலவீச
அங்கு வந்து அமர்ந்து அவள்
உடல் வாழ உள்ளம் நீங்கிற்றே!
பாவ பூமிக்கும் கூன்கொண்ட சூரியனுக்கும்
நடுவே வாடும் சந்திரனானாள் இன்று!
தவப் பரிசாய் தான்ஈந்த காளை
பயமின்றி சிதடனாய் இழந்தான் காலை
நீ காணா என்னுருவம் மாய்க
என்ற லறிய அவன்வாய்ப் பொத்தி
நெருக்க ஈந்தவளை ஈந்தவள் முத்துச்சிதர
முகில் மெத்தை புறம் தள்ளி
படைத்தது பாவம் படைத்தவன் பாவி
ஒழிக துன்பம் ஓங்குக அமைதி
உயிரொலி ஒன்று குன்று மெனில்
என் உயிர் துறப்பேன்!
குன்றியது!
துறந்தான்!
ஒழிந்தது!
ஓங்கியது!