எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைப்பு : ஆளப்போறான் தமிழன் முன்னுரை : இத்தலைப்பை...

                                                                              தலைப்பு : ஆளப்போறான் தமிழன் முன்னுரை :          இத்தலைப்பை தேர்ந்தெடுத்து தந்தவர்களுக்கு என் நன்றிகளும்.பாராட்டுக்களும்.ஏன் ஆளவேண்டும் தமிழன்.இதற்குமுன் அளவில்லையா தமிழன் ?.தமிழன் இன்று நாடாள்வதன் அவசியம்தான் என்ன ?.உலகையே கட்டி ஆளும் ஆற்றல் படைத்தவனென்றால் அவன் வரலாறு என்ன.அவனது இயல்புகள் என்ன.அவன் செய்த சாதனைகள்,அவன் ஆள்வதால் வரப்போகும் மாற்றங்கள் என்ன.அவன் வாழ்வியல் தத்துவம் என்ன.அவன் இன்றய நிலை என்ன.இது சாத்தியமா என்ற பல கேள்விகளுக்கு விடையாக இக்கட்டுரை விரிகிறது.முடிந்தவரை என் சிற்றறிவுக்கு எட்டியதை விளக்கியிருக்கிறேன். யார் தமிழன்..?!          மனிதனின் முதல் வித்து தமிழன்.முதன் முதலில் தோன்றிய மனிதன் தமிழன் என்கிறது இன்றய ஆராய்ச்சி முடிவுகள்.அப்படியென்றால் உலக மனிதர்களின் மூலம் நாம்தான் என்பதில் மாற்றமில்லை.ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய மொழி நம் தமிழ் மொழி என்றும் ஆய்வுகள் சொல்லுகிறது. ஆக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழே என்பதில் ஐயமில்லை. இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் இலக்கிய வரலாற்றை கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிமட்டுமே! ஆதி தமிழர் அக்காலத்தில் உலகெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.அந்த சூழலில் பழந்தமிழ் மொழி ஆங்காங்கே திரித்து பேசப்பட்டிருக்கின்றது அந்த திரிபு நிலை பழந்தமிழ் மொழியே காலப்போக்கில் வெவ்வேறு மொழிகளாக தனித்துவம் பென்றிருக்கிறது.உதாரணமாக பாரதநாட்டில் பேசப்பட்ட பழந்தமிழ் மொழியே பழந்திராவிடமொழி என்று பிற்காலத்தில் பேசப்பட்டு வந்திருக்கிறது(திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதன் திரிபே. தமிழ் ,தமிள,த்ரமிள,த்ரமிட,திரபிட,திரவிட என்று திரிந்தமைந்த சொல்லே)    வடகிழக்கு கணவாய் வழியாக வந்த துரானியரும்,வடமேற்கு கணவாய் வழியாக வந்த ஆரியரும் இந்திய மக்களோடு கலந்து ஒன்றானதால் பழந்தமிழ் மொழி சிலமாறுதல்களை பெறுகிறது அவை பிராகிருதம்,பாலி போன்ற மொழிகள் தோன்ற காரணமாகிறது.(கோலமி,பார்ஜி,நாய்கி,கோந்தி,கூ,குவி ,கோண்டா,குர்க்,பிராகூய்,மால்டா,ஒரொவன்,கட்பா போன்ற மொழிகளில் இன்றும் பல தமிழ் சொற்களை காணலாம்) காலப்போக்கில் திராவிட மொழி மாற்றமொழிகளோடு கலந்து பேசப்பட்டதால் இந்தியாவில் பழந்திராவிட மொழிபேசியவர்கள் தென் பகுதி என்ற அளவில் குறுக்கிவிட்டார்கள் (நிலப்பரப்பிலும் குறுகியது) அவர்கள் மீண்டும் மூவேந்தர்கள் காலத்தில்(சேர.சோலா ,பாண்டியர்) காடுகளாலும் மலைகளாலும் பிரிக்கப்பட்டு திராவிட மொழி மீண்டும் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என்று வேறுபட்டது.முடிவில் தமிழ் மொழிமட்டும் எந்த மாறுதலும் இன்றி பேசியமக்களின் நிலப்பரப்பும் குறுகியது.,தமிழ் மொழிபேசிய மக்களின் எண்ணிக்கையும் குறுகிவிட்டது.                  இந்த வரலாற்றை ஒப்புக்கொள்கிறவன் எவனோ,தமிழை வாய்மொழியாக அல்ல தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றவன் எவனோ,தனது தாய்த்தமிழ் மேலும் திரிந்தழியாது பாதுகாக்க துடிப்பவன் எவனோ,இயற்கையோடு,மற்ற உயிர்களை போற்றி மரபுசார்ந்த தர்ச்சார்பு வாழ்வியலை முன்னெடுப்பவன் எவனோ,தன் நிலப்பரப்பை தானே ஆளவேண்டும் என்று துடிப்பவன் எவனோ, பிறர் ஆளுமையை அடியோடு வெறுப்பவன் எவனோ, சாதிகள் மாதங்கள் கடந்து தமிழன் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்து இயங்குபவன் எவனோ.அவனே தமிழன்.!!!  தமிழனின் சிறப்புகள்..!     அன்றே குமரிக்கண்டத்தை 49 நாடுகளாக பிரித்து ஆண்டிருக்கிறான் தமிழன். கடல் மார்க்கமாக இந்தோனேசியா,சீன,மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் வணிகம் செய்திருக்கிறான்(சிலப்பதிகாரம் என்ற நூலில் இதைப்பற்றிய குறிப்புகள் உள்ளன ).,முப்பெரும் சங்கங்கள் அமைத்து தன் மொழியை காத்தவன் தமிழன்.இவனது இலக்கிய வரலாறு நீண்டு நெடியது...,சங்க இலக்கியம் (அகநானூறு,புறநானூறு போன்ற நூல்கள்) நீதி இலக்கியம் (வள்ளுவப் பெருந்தகை அருளிய திருக்குறள்),இரட்டை காப்பியங்கள்(சிலப்பதிகாரம்,மணிமேகலை),பக்தி இலக்கியம்(நாயன்மார்,ஆழ்வார் பாடல்கள்) காப்பியங்கள்,புராண இலக்கியங்கள்,கிறிஸ்த்தவ இலக்கியங்கள்., வான சாஸ்த்திரம்.வாஸ்தியாயனார் அருளிய காமசாஸ்த்திரம்,யோக சாஸ்த்திரம்,சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்.,கணிதவியல் (ஸ்ரீனிவாச ராமானுஜம் ) மேலும் இருபதாம் நூற்றாண்டில் பாரதி,பாரதிதாசன்,கல்கி மற்றும் புதுமைப்பித்தன் போன்றோர்களின் ஒப்பற்ற படைப்புக்கள்.என்று தமிழர்களின் சிறப்புக்கள் எண்ணிலடங்காதவை.            கட்டடக்கலையின் தலைசிறந்து விளங்கியவன் தமிழன் (சோழர்களின் கட்டிடக்கலை) சுதந்திர போராட்ட காலங்களில் தமிழனின் பங்கு மிகச்சிறந்தது.., (வீரபாண்டிய கட்டப்பொம்மன்.,வீர மங்கை வேலுநாச்சியார்.,மருதுசகோதரர்கள்,வாஞ்சிநாதன் கப்பலோட்டிய  தமிழன் வா உ சிதம்பரனார்,கொடி காத்த குமரன்.,சுப்பிரமணிய சிவா . முண்டாசு கவி பாரதியார்.. மற்றும்  தமிழீழத்திற்காக பாடுபட்ட தலைவர் அண்ணன் பிரபாகரன் போன்ற எண்ணற்ற தமிழர்கள் சுதந்திரத்துக்காக பாடுபட்டனர்) தமிழனின் வாழ்வியல் தத்துவம்..!     இயற்கையின் இயல்போடு இசைந்து, இயற்கையோடு இணைந்து அதை வணங்கி வாழ்வது,தற்சார்பு வாழ்வியலை முன்னெடுப்பது,வேளாண்மையில் தன்னிறைவடைவது.இயற்கையை அழிக்காத அறிவியலை கொண்டாடுவது.பக்கவிளைவற்ற மருத்துவத்தை முன்னெடுப்பது.ஆன்மீக அடிப்படையை பகுத்தறிவோடு அணுகுவது.தேவைகளுக்காக வர்த்தகத்தை பெருக்குவது.உயிர் வளங்களை அழியாது காப்பது.வான்புகழ் வள்ளுவனின் நெறிகளை உலகிற்கு உரைப்பது.மரபுகளை சிதைக்காது அடுத்த தலைமுறைக்கு கடத்துவது.ஏறுதழுவலில் தன் வீரத்தை பறைசாற்றுவது .மரம்நடுவதை தனது பொழுதுபோக்காக கொள்வது . மயிலாட்டம்,ஒயிலாட்டம்,கரகாட்டம். கபடியாட்டம்,காவடியாட்டம்.இதுபோன்ற நாட்டு கலைகளை அழியாது பாதுகாப்பது.போன்ற உயரிய செயல்களே தமிழனின் வாழ்வியல் தத்துவங்களாக கொள்ளப்படுகிறது. தமிழனின் இன்றய நிலை.        இன்றய நிலையை எடுத்தியம்பும்பொழுது என்னுள்ளம் வெடித்துசிதைகிறது.அகம் புறம் பற்றி அன்றே எழுதி தன் வாழ்வின் அறம் காத்த தமிழன் இன்று அறநெறியற்று நடுத்தெருவில் மதுவின் பிடியில் விழுந்து கிடப்பதும்.தான் உலகில் முதல் தோன்றிய மூத்தகுடி என்பதை மறந்து மற்றவரின் முன் தன் சுய இலாபத்திற்காக முகஸ்துதி பாடுவதும். வீழ்வது பெரிதல்ல தான் வீழ்ந்து கிடப்பதை நினையாதிருப்பதுதான் பெரிதென்ற நம் பாரதியின் கூற்றை மறந்து போனது.தமிழன் சாதிகளால்.மதங்களால் பிரிந்து கிடப்பது.தனது பெருமைகளை தானே மறைந்துபோனது.பிழைப்பிற்காக அரசியலாரை யாசிப்பது.வர்த்தக உலகில் வசப்பட்டு போனது போன்றவையே இன்றய தமிழனின் உண்மையான நிலை.தமிழா உணர்ந்துகொள் !! முடிவுரை !       உலகில் தோன்றிய முதற்ப்பெறும் இனத்தவன்.தீண்டாமை பிடியினில் விடுபட்டு,தீயவர் கைகளை முறித்திட்டு,தாய்மொழி பெரிதென முழங்கிட்டு,வர்த்தக வலையினை அறுத்திட்டு,பூஜை அறையினில் மதங்களை விடுத்திட்டு,தற்சார்பு கொள்கையை முழங்கிட்டு,வள்ளுவன் வாக்கினை தான் பெற்று,அரும் பெரும் தலைவர்கள் வழிநின்று,இயற்கையை காத்து இன்முகமேற்று ஓர்நாள் "ஆளப்போறான் தமிழன் " உலகில் தலைசிறந்து வாழப்போறான் தமிழன். வாழ்க தமிழ் !! வளர்க்க தமிழினம்!!!.

-கங்கைமணி       

பதிவு : கங்கைமணி
நாள் : 4-Feb-18, 11:20 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே