எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று தமிழுக்கு பிறந்த நாள்...

தமிழை அன்பாக நேசித்த தமிழன்பனுக்கு பிறந்த நாள்...

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு...
புதுவை அகன் அய்யாவிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு....

"கவியரசர் தமிழன்பன் அய்யா அவர்களின் பிறந்தநாளுக்கு விருது பெறும் எழுத்தாளர்களில் உன் பெயரும் சேர்த்துள்ளேன்" என்று

அதுவும் சென்னையில் என் இல்லம் இருக்கும் இடத்தின் அருகிலேயே விழா என்று அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார்...

என் துணைவியாரிடம் அழைப்பிதழை காண்பித்தப்போது "யார் இந்த பரிதி.முத்துராசன்?" என்ற கேள்வியுடன்...

அவன் நான்தான் என்றும் பரிதி.முத்துராசன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுவதாக சொன்ன போது.....
ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்கள்

அப்புறம்தான் தெரிந்தது அந்த துள்ளல் எனக்கு அல்ல...
இல்லம்தோறும் தொலைக்காட்சியில் இன்பத் தமிழில் செய்தி வாசித்து பலர் இதயங்களில் இடம் பிடித்த...
அய்யா தமிழன்பன் அவர்களுக்கு என்று....

பிறகு அய்யா தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு நானும் விருது பெற்ற நிகழ்வு மட்டுமல்ல....
அன்றிலிருந்து என் துணைவியார் மனதில் எனக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்தது...

இந்த சிறப்பினை எனக்கு வழங்கிய புதுவை அகன் அய்யா அவர்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது...🙏


மேலும்

உண்மைதான் . எனக்கும் அதில் கலந்து கொண்ட பெருமையாக உள்ளது . ஐயா அவர்களின் பிறந்த நாளை , ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய திருநாள் . ஐயா அவர்களை , மகா கவிஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை . சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் . ஐயா அவர்கள் நூறாண்டு கடந்து பல்லாண்டு வாழ்ந்திட விழைகிறேன் . அன்பு நண்பர் அகன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் . பழனி குமார் 28-Sep-2022 10:38 pm

                    பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறையும் பெண்மையும் 

கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களைப் பொதுவாக மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என இருவகையில் அடக்குவர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் மேற்கணக்காகும். கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டாகும். பாட்டு, தொகை நூல்களில் மேற்கணக்கு நூல்களை அடுத்துப் போற்றப்படுவது கீழ்க்கணக்கு நூல்களாகும். தமிழ்விடு தூது என்னும் சிற்றலக்கிய நூல், 


 - - - - - - - - - மூத்தோர்கள் 
பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் 
சேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கு 

என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதிணென் கீழ்க்கணக்கு என்னும் வழக்குகள் மிகவும் பழமையானவை என்பது புலனாகிறது. கேடில் பதினெண் கீழ்கணக்கு என்பதிலிருந்து கெடுதலை தவிர்ப்பது நீதி உரைப்பது இதன் நோக்கம் என்பது தெளிவாகப் புலனாகிறது. 

நீதி எடுத்துரைத்தலில் முதன் முதலில் இடம் பெறும் பதினெண் கீழ்க்கணக்கு நூலகள் பெண்களுக்கான நீதி எடுத்துரைத்தலிலும் பெரும்பங்காற்றுகிறது. அவ்வகையில் பெண்களின் நிறையை விளக்குவதாக இந்தக் கட்டுரை அமைகிறது. நீதிகளை எடுத்துரைத்தலால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் மட்டும் ஆய்வின் எல்லையாக அமைகிறது. 

நிறை - அகராதி பொருண்மை 

கீழ்க்கணக்கு நூல்களில் நிறை என்னும் சொல்லிற்கு வழங்கபட்ட பொருளை அறியும் முன்னர் அதன் பொருள் இன்றையச் சூழலில் எவ்வாறு வழங்கப் படுகிறது என்பததையும் வெவ்வேறு காலகட்டங்களிலும் என்ன பொருள்களில் வழங்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. 

சங்க இல்க்கியங்கள், கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள் என இவற்றிற்கு மட்டும் விளக்கங்கள் தரும் சனத தமிழ் அகராதி நிறை என்பதற்கு, 

 “அடக்கம், அறிவு, ஒப்பு, ஒழுக்கம், ஒழுகல், ஒழுங்கு, கற்பின் வழி நிற்;றல், கற்பு, கனம், குறைவில்லாத, சால், சீலம், நிறுக்கப்படும் பொருள், நிறுத்தல், நிறைமொழி, நீதி, நெஞ்சை நிறுத்தும் ஆற்றல், பெருமை, மனத்தை அதன் வழி விடாது நிறுத்தல், மனத்தை நல்வழியில் நிறுத்தல் ஆகிய நற்பழக்க வழக்கங்கள், மனதில் பிறர் அறியாத படி நிறுத்தும் நிறம், மனவடக்கம், மனஉறுதி, மாட்சிமை, மிகுதி, வெள்ளம், வேதம்.”  (சோ. அ. புகழீசுவரன் சனத அமிழ் அகராதி ப.99) 

என விளக்கம் தருகிறது. இவ்விளக்கத்தைக் கொண்டு நிறை என்னும் சொல் மனம் சார்ந்த கட்டுப்பாடு, ஒழுக்கம், கற்பு என்னும் பொருள்களைத் தருவதாகச் சுருக்கமாகக் கொள்ளலாம்.

இன்றையச் சூழலில் நிறை என்னும் சொல் பொதுவாகப் பல பொருண்மைகளில் வழங்கப்படுகிறது. தமிழ் மொழி அகராதியில், 

“நிறை: அழிவின்மை, ஆடுஉக்குண நான்கினொன்று, இடை, உறுதிப்பாடு, கற்பு, தயிரியம், துலாராசி, நியாயம், நிறுத்தலளவு, நிறையென்னேவல், நிறைவு, நீர்ச்சால், நூறுபலம்,  மாட்சிமை, முறையினிலைமை, வரையறை” (ந. கதிர் வேற் பிள்ளை, தமிழ் மொழி அகராதி, ப.897) 

என்கிறார் ந. கதிர் வேற்பிள்ளை. இங்கு நிறை என்னும் சொல் நிறைவு, கற்பு, ஆண்களின் கனம், உறுதி என்னும் பொருள்களில் வழங்கப்படுகிறது. 

சுராவின் தமிழகராதி, நிறைகுணம் என்பதனைப் பொறுமையான குணம் என்றும் நிறை என்பதனைத், 

“தராசு, எடை, துலாம் ராசி, மன அடக்கம், தாளவகை. வலிமை, அறிவு, அழிவிண்மை, நீதி” (சுராவின் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, ப.636) 

என்றும் பொருள் வழங்குகிறது. இதன்படி மன அடக்கம், கற்பு, நீதி என்னும் பொருள்களில் நிறை வழங்கப்படுகிறது. 

க்ரியாவின் தற்காலத் தமிழகராதி நிறை என்பதற்கு, 

“நிறைய, நிறைந்து, இனிய உறவுகள், சிறப்புகள்” 

என்று பொருள்படும்படியாக விளக்கமளிக்கின்றது. 

மேற்கண்ட அகராதிப் பொருண்மைகளைப் பார்க்கும் பொழுது சங்ககாலம் முதல் இன்று வரை நிறை என்னும் சொல்லின் பொருள் சிறுபாண்மை மாறி மாறி அமைந்தாலும் பெரும்பான்மை மாறாத ஒரே தன்மையுடைய பொருள்களைத் தருவதாக அமைகிறது. இவ்விளக்கங்களைக் கொண்டு நிறை என்பது மனக் கட்டுபாடு, கற்பு என்னும் பொருண்மையில் அமைவதாகத் துணிய முடிகின்றது. 

திருக்குறளில் நிறை        

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நிறை என்னும் சொல் திருக்குறளில் தான் அதிகம் கையாளப்பட்டுள்ளது. அது மேம்போக்காகப் பார்க்கும் பொழுது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக அல்லாமல் இருவேறு பொருளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆண்மையைக் குறிக்கும் நிறை என்பது மனக்கட்டுப்பாடு என்று பொருண்மையில் அமைந்துள்ளது. 

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் 
யாங்ஙனும் யார்க்கும் எளிது.                           (குறள்.864)

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில் 
பேணிப் புணர்பவர் தோள்                                 (குறள்.917) 

என்னும் இரண்டு குறட்பாக்களிலும் நிறை என்னும் சொல் மனக் கட்டுப்பாடு என்னும் பொருண்மையில் வள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது. 

நிறைநீர நீரவடி கேண்மை பிறைமதிப் 
பின்நீர பேதையார் நட்பு                                  (குறள்.782) 

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி ஒழுகப் படும்.                                       (குறள்.154) 

என்னும் குறட்பாக்களில் அறிவுடையார் பேதையரிடம் நட்பு கொள்ளமாட்டார் என்றும் நிறையுடைமை என்பது பொறையுடைமை என்னும் ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் இருப்பதையே குறிப்பிடுகிறது. அதேபோன்று, 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டிவிடும்.                                (குறள்.28) 

என்னும் குறட்பாவில் நிறைமொழி மாந்தர்கள் என்பவர் மனதைக் கட்டுப்படுத்தி வாழும் முனிவர்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். ஆகவே ஆண்மையைப் பற்றிய நிறையை மனக்கட்டுப்பாடு என்பதுடன் தொடர்புடையதாகவே குறிக்கிறார் வள்ளுவர். 

வள்ளுவர் வழி பெண்களுக்கு உரியதாகச் சொல்லிப்படுகின்ற நிறையே தலைமையானதும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுகிறது. இங்கு நிறை என்பது கற்பு நெறி என்று விளக்கம் கொள்ளப்படுகிறது. 

சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் 
நிறைகாக்கும் காப்பே தலை                           (குறள்.57)

இக்குறளுக்கு விளக்கம் தரும் பரிமேலழகர், “நிறை : நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக் காவலால் பயன் இல்லை” என்பார் (பரிமேலழகர் (உ.ஆ.), திருக்குறள், பக்.57-58). எனவே நிறை என்பது கற்பு நெறியில் நிறுத்துதல் எனப் பொருள்படும். 
திருவள்ளுவர் நிறை அழிதல் என்னும் அதிகாரத்தில் இரு இடங்களிலும், நாணுத்துறவு உரைத்தல் என்னும் அதிகாரத்தில் ஒரு இடத்திலும் நிறை என்பதனை விளக்குகிறார்.

நிறையுடையேன் என்பேன்மண் யானோ: என் காமம் 
மறையிறந்து மன்று படும்                                     (குறள்.1254)

நிறை அரியர் மன்அளியர் என்னாது காமம் 
மறைஇறந்து மன்று படும்.                                     (குறள்.1138) 

இக்குறட்பாக்களில் நிறையுடையவராக இருக்க தம்மால் இயலவில்லை காமம் வெளிப்பட்டது. அதனால் பிறர் அறியாமல் காக்க முடியவில்லை என்று தலைவி வருந்துவாள். நிறையழிதல் என்பதற்கு, “அதாவது தலைமகள், மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்கமாட்டாது வாய்விடுதல்” (பரிமேலழகர் (உ.ஆ.), திருக்குறள், ப.507) என்கிறார் பரிமேலழகர். 

அதே போன்று “நிறையெனப்படுவது மறை பிறர்அறியாமை” (கலி. நெய்தல்.16) என்கிறது கலித்தொகை. 

பெண்களுக்கு நிறை என்பது நாணம் என்ற தாழிட்ட கதவு என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

“காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு”                                  (குறள்.1251) 

இக்குறள் மூலம் நாணம் என்ற தாழிட்ட கதவினை உடைப்பவர்கள் காம வேட்கை மிகுதியாக உள்ள கணிச்சியாவர் என்பது புலனாகின்றது ஒழுக்கம் வாய்க்கப்பெற்ற தலைவிக்கு, 

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த 
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப                (தொல்.கள.8) 

என்பார் தொல்காப்பியர். பெண்களுக்கு உரியவையாகச் சொல்லப்பட்ட குறட்பாக்களில் நிறை என்பதனை மனக்கட்டுப்பாடு, நாணம் தாழிட்ட கதவு, கற்பு வழி நெஞ்சை நிறுத்துதல் ஆகிய பொருள்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

பிற இலக்கியங்களில் நிறை             

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைத் தவிர பிற அற இலக்கியங்களில் எட்டு இடங்களில் நிறை என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஐந்து இடங்களில் ஆண்களுக்குரிய மனக்கட்டுப்பாடு என்னும் பொருண்மையிலும் மூன்று இடங்களில் பெண்மைக்குரிய மனக்கட்டுப்பாடு என்னும் பொருண்மையிலும் வருகின்றது.             
ஆடவர் பற்றிக் குறிப்பிடும் இன்னா நாற்பதில் நிறை என்னும் சொல் நெஞ்சினை ஒரு வழியில் நிறுத்துதல் என்னும் பொருளில் வருகின்றது.                         
சிறையில்லா மூதூரின் வாயில்காப் பின்னா            
       துறையிருந்து ஆடை கழுவுதல் இன்னா              
        அறைபறை அன்னவர் சொல்இன்னா இன்னா       
        நிறையில்லான் கொண்ட தவம்                        (இன்னா.23)         

    இப்பாடலில் நிறையில்லாதவன் கொண்ட தவம் இன்னாததாக அமைகின்றது.             
திரிகடுகத்தில் நிறை என்பது ஐந்து புலன்களையும் அடக்குபவன் என்னும் பொருளிலும், மனதில் உறுதி கொண்டவன் என்னும் பொருளிலும் அமைகின்றது. இதனை,           
நிறைநெஞ் சுடையானை நல்குரவு அஞ்சும்                        
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்                        
மறவனை எவ்வுயிரும் அஞ்சும்இம் மூன்றும்                         
திறவதில் தீர்ந்த பொருள்                                              (திரி.92)                   

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்                         
நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம்            
        தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்                   
       தூற்றின்கண் தூவிய வித்து                                          (திரி.80)
 
என்னும் பாடல்கள் விளக்குகின்றன. இவ்விரு பாடல்களிலும் ஐம்புலன்களை அடக்குதல், மனதில் உறுதி கொண்டிருத்தல் என்னும் பொருண்மைகள் மனக்கட்டுப்பாட்டையே குறிக்கின்றன. அதேபோன்று மன உறுதி இல்லாமல் பெண்ணாசையில் ஓடித் திரிபவர் என்னும் பொருண்மையில் பின்வறும் சிறுபஞ்சமூலம் பாடல் ஒன்று அமைகின்றது.                         
ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்                
        தாம்பல்வா யோடி நிறைக்காத்தல் - ஓம்பார்                          
நெடுங்கழைநீண் மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்                       
கொடுங்குழை போலக் கொளின்                  (சிறுபஞ்ச.55)         

இப்பாடலிலும் மன உறுதியைக் காத்தல் என்னும் பொருளிலேயே நிறை என்னும் சொல் இடம்பெறுகின்றது. ஒரு பெண்ணிடத்தில் கூறுவதைப்போல அமைந்த,                         

நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே                         
பொறையுடைமை பொய்மை புலாற்கண் - மறையுடைமை       
   வேயன்ன தோளால் இவையுடையான் பல்லுயிர்க்கும்          
        தாயன்னன் என்னத் தகும்                                    (ஏலாதி.6) 

என்னும் பாடலிலும் நிறை என்பது மனவடக்கமுடைமை என்னும் பொருண்மையிலேயே அமைந்துள்ளது.             

அற இலக்கியங்களில் மேற்குறிப்பிட்ட ஐந்து பாடல்களில் ஆடவர் பற்றிய நிறை அனைத்தும் மனக்கட்டுப்பாடு என்னும் பொருண்மையிலேயே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.             

பெண்மை பற்றிய நிறை என்னும் சொல் திருக்குறளைத் தவிர்த்த அற இலக்கியங்களில் மூன்று இடங்களில் கையாளப்படுகின்றது. அவற்றில் பழமொழி நானூற்றில் ஒரு இடத்தில்,                         
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்                        
சிறையான் அகப்படுத்தல் ஆகா – அறையோ               
        வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால்                    
     திருந்துதல் என்றுமோ இல்    (பழமொழி.262) 

என்று வழங்குகிறது. இப்பாடலில் நிறையான் மிகுகல்லா நேரிலையார் என்பது மனக்கட்டுப்பாடுடைய பெண்ணை வசப்படுத்த முடியாது என்னும் பொருளைத் தருகிறது. நான்மணிக்கடிகையில் ஒரு பாடலில்,                       

பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற              
       பெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து                   
      ஆர்தலின் நன்று பசித்தல் பசைந்தாரின்                         
தீர்தலின் தீப்புகதல் நன்று.                 (நாண்மணி.15) 

என்னும் அடிகளில் நிறை என்னும் சொல் இடம்பெறுகிறது. இதன் உரையாசிரியர், “பெருமையில்லா மாந்தரைவிட நெஞ்சை ஒருவழியில் நிறுத்துகின்ற கற்பில் சிறந்த பெண் மேலானவள்” (துரை. இராசாராம் (உ.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) முதல்பகுதி, ப.18) என்று உரை தருகிறார்.             

இனியவை நாற்பதின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்,                        

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே                        
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே                        
மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்                         
எனைமாண்பும் தான் இனிது நன்கு.              (இனியவை.10) 

என்கிறார். “கற்பு மாட்சியில்லாத மனைவியரை நீக்கி விடுதல் நல்லது” (துரை. இராசாராம் (உ.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) முதல்பகுதி, ப.65) என்பது உரையாசிரியர் பாடம்.            

நாண்மணிக்கடிகை, இனியவை நாற்பது, ஆகிய இரு பாடல்களிலும் நிறை என்னும் சொல்லிற்கு, ‘நெஞ்சை ஒரு வழியில் நிறுத்துகின்ற கற்பில் சிறந்த பெண்’ என்றும், ‘கற்பு மாட்சியில்லாத மனைவியர்’ என்றும் உரையாசிரியரால் பொருள் கொள்ளப்படுகிறதே தவிர கற்பு என்பது மூல ஆசிரியரின் பாடம் அன்று. 

நிறையும் பெண்மையும்             
நிறை என்னும் சொல்லின் பொருளை வெளிப்படையாகக் கற்பு என்று திருவள்ளுவரும் பிற அற இலக்கிய ஆசிரியர்களும் கூறாத பொழுது அகராதிகள் நிறை என்பதற்குக் கற்பு என்று பொருள் கொள்ள வேண்டியதன் காரணம் ஆயவேண்டியது கடமையாகிறது. முதலில் மனக்கட்டுப்பாடு என்னும் பொருளை நினைக்க அது மனத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பொருளைத் தருகிறது.           

  ஆண்மை பற்றிய நிறை என்பதனை அற இலக்கியங்கள் மனக்கட்டுப்பாடு என்று வெளிப்படையான பொருள் வழங்குகிறது. பெண்மை பற்றிய நிறை என்பதனை மனக்கட்டுபாடு என்னும் பொருளுடையதாயினும் வேறொரு சொல்லில் அதாவது கற்பு என்னும் சொல்லில் குறிக்க இன்றியமையாத காரணம் புலப்படுகின்றது.            

ஆடவர் என்போர் தம் நெஞ்சைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ளுதல் மனக்கட்டுப்பாடு ஆகும். அதாவது பெண்கள் மீது மனத்தைச் செலுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்வது ஆகும். அதே பொருண்மை பெண்டிற்குப் பொருந்தாது. தொல்காப்பியர் கூற்றுப்படி, அச்சமும் நாணமும் பெண்டிர்க்கு முந்துறும். இயல்பாகவே பிறர் (ஆடவர்) மீது தம் மனம் செல்லாது ஆகையால் பெண்டிர்க்கு மனக்கட்டுப்பாடு என்பது ஆடவர்களிடத்தே தம் மனத்தைப் பறிகொடுக்காமல் காப்பது. எனவே மனக்கட்டுப்பாடு என்பது ஆண்களுக்கு மனதைப் பிறர் மீது செலுத்தாமை, பெண்களுக்கு மனதைப் பிறரிடம் பறிகொடுக்காமை என்பது தெளிவாகிறது. இதனை,                       
நாண்இல மன்ற எம்கண்ணே ..........                    
     .......... ........... பிரிந்தினோர்க்கு அழலே                (குறுந்.35) 

என்னும் குறுந்திணைப் பாடல் மூலம் அறியமுடிகின்றது.            

மனதைக் கட்டுப்படுத்தல் என்பது ஒரு நிகழ்வின் மீது எண்ணம் சென்ற பின்னர் கட்டுப்படுத்துதல். ஆனால் பறிகொடுக்காமை என்பது இயல்பிலேயே மனத்தைத் தூய்மையாகக் கொண்டிருத்தல் ஆகும். ஆகையால் மனதைப் பறிகொடுக்காமல் காக்கும் வகையான மனக்கட்டுப்பாட்டைத் தனியே ஒரு சொல்லில் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதனால்,                      

பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்புஎன்னும்                 
        திண்மைஉண் டாகப் பெறின்.                                     (குறள்.54) 

என்னும் குறளின்படி பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் நிறை என்பதைக் கற்பு என்னும் சொல்லால் குறித்தனர் சான்றோர். 

தொகுப்புரை 

 நிறை என்னும் சொல்லிற்குப் பொதுவாக மனக்கட்டுப்பாடு, கற்பு என்னும் பொருள்கள் வழங்கப்படுகிறது. 

• நிறை என்னும் சொல் திருக்குறளில் ஒன்பது இடங்களில் கையாளப்படுகின்றது. ஐந்து குறட்பாக்களில் ஆண்கள் பற்றிய மனக்கட்டுப்பாட்டையும் நான்கு குறட்பாக்களில் பெண்மை பற்றிய மனக்கட்டுப்பாட்டையும் குறிப்பதாக அது அமைகின்றது. 

• திருக்குறளைத் தவிர மற்ற பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் எட்டு இடங்களில் நிறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று பாடல்களில் பெண்மையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
• பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மொத்தம் எட்டு இடங்களில் பெண்மை குறித்த நிறை இடம்பெறுகின்றது. இந்நிறை மனக்கட்டுப்பாடு என்னும் பொருளில் வழங்கப்பட்டாலும் பெண்மை குறித்த சிறப்பு காரணமாகக் கற்பு என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது. 
•  அற நூல்களில் நிறை என்னும் சொல் நிறைதல், மிகுதி என்னும் பொருள்களிலும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.      

மேலும்

வார்த்தைகளின் வலிமை


நாம் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை, நினைக்கும் எண்ணங்களுக்கு எழுச்சி இருக்கிறது என்பதை சில நேங்களில் உணர்ந்திருப்போம். நல்லதை பேசினால் நல்லதும், கெட்டது பேசினால் கெட்டதும் நடக்கும் என்பது நுாற்றுக்கு, நுாறு உண்மை.

நம்முடைய நல்லெண்ணங்களும், வார்த்தைகளும், நம்மிலும், நம்மை சுற்றியுள்ளவர்களிடமும், ஏன் இந்த வையகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுள்ளது


மனதின் அதிர்வலைகள் நாம் பேசும் வார்த்தைகளுக்கு மிகவும் வலிமையிருக்கிறது. நம் மன அதிர்வலைக்கு ஏற்ற ஒத்த அதிர்வலைகள் உள்ளவர்களிடம், நம்முடைய வார்த்தைகள் அதே போன்ற எண்ணங்களைத் துாண்டிவிடும் சக்தியுடையது.

நல்லதைப் பேசினால் நிச்சயம் நல்லது நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு


சொல் மந்திரம். எத்தனை முறை அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறோம்? சில வார்த்தைகள் ஆறுதலாக வந்துசேரும். சில வார்த்தைகள் நம்மைச் செதுக்கும். வேறு சில நம்மைப் புண்படுத்தவும் செய்கின்றன. சில வார்த்தைகள் வெல்லும். சில கொல்லும்.


உண்மையான அக்கறை உள்ளவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள் கேட்பதற்குக் கண்டிப்பாக இருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் நம்மை நன்றி சொல்லவைக்கும். நம் அறியாமையைத் தெளியவைக்கும். அவை புத்தி புகட்டி ஞானத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மைக் கொண்டுசெல்லும்


 வாழ்க்கையில்  நாம் பெறும்  அனுபவங்கள்  பெரும்பாலும்  வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே  அமைகின்றன.  உறவின்  அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு மற்றும்  நட்பு, ஆறுதல், வாழ்த்து போன்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் வார்த்தைகளின் கோர்வையாகத்தான்  நிகழ்கின்றன.  சிலவார்த்தைகள் குணத்தைக்  காட்டும், சில வார்த்தைகள் பண்பை பறைசாற்றும்.  சில வார்த்தைகள் சாட்சி சொல்லும், சில வார்த்தைகள் ஆட்சி செய்யும்.  எனவே சொல்லும் சொல்லின்  பொருளறிந்து பேசுவது அறிவுடைமையாகும்.


வார்த்தைகள் கடவுளையும் கண்முன்னே காட்டக்கூடிய வல்லமைப் பெற்றவை. இவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தைகள், அருகே இருக்கும் மனிதர்களை நெருக்கத்தில் கொண்டுவருவதும், அல்லது நெருக்கடியில் தள்ளுவதும்  அதை   பயன்படுத்துவோரின் வாய்மொழிப்  பலனே  ஆகும். 


வார்த்தை  என்பது  பல்வேறு  உணர்வுகளை உள்ளடக்கிய விதைப் போன்றது.  அந்த  விதையின் விளைச்சல், மணம் வீசும் மலர்களைப்போல சூழலை இனிமையாக்கலாம். சுவையான கனிகளைப்போல நிறைவான பயன்தரலாம். மூலிகைப்போல உயிர்காத்து மகத்துவம் ஆகலாம். நிழல் தரும் மரம் போல ஆறுதல் தரலாம். இத்தகைய ஆற்றல் கொண்ட வார்த்தை பிறந்த இடத்துக்கும் பெருமை சேர்த்து, சென்று சேரும் இடத்தையும் உயர்த்தும் தன்மை கொண்டது.

வார்த்தை, பேசுபவரின் தரத்தைக் காட்டும் கண்ணாடி. அறிவின் ஆழம் குறிக்கும் அளவுகோல். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், நாகரிகத்தையும் இன்று நாம் அறிந்துகொள்ள பெரிதும் உதவுவது அவர்கள் விட்டுச்சென்ற ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் உள்ள வார்த்தைகளே. உலகம் போற்றும் காப்பியங்களும்,காவியங்களும் வார்த்தைகளின் வண்ணக் கோலங்கள்தான். 


இன்றைய வார்த்தைகள்தான், நாளைய வரலாறு படைக்கும் சக்தி வாய்ந்தவை. காலம் கடந்தும் ஞாலம் வெல்லும் ஆற்றல் பெற்றவை. இதை நன்கு உணர்ந்து எங்கும் எப்போதும் நல்ல உணர்வைத் தரக்கூடய ஆற்றல்மிக்க சொற்களையே பயன்படுத்திப் பலனளிப்போம், பயன்பெறுவோம். 

மேலும்

      சாதிய மறுப்பு கொள்கை

சாதி என்பது மனிதனின் இன்னொரு பாலினமாய் மாறிவிட்டது சாதி என்பது இந்த மண்ணில் இருந்து அகற்றாத வரை இந்த மண்ணில் வளர்ச்சி என்பது கிடையாது.
 சாதி என்னும் கொடிய அரக்கன் மண்ணில் உள்ளவரை இந்த சமுதாயம் உயர்வு என்பது இல்லை மதம் என்னும் போர்வையில் ஒழிந்து வாழும் இந்த சாதிய கொடுமையை வேர் அறுக்க இந்த மத கோட்பாட்டை உடைக்க வேண்டும் சாதிய எதிராக பெரியார் அண்ணல் அம்பேத்கர் போன்றோர் உருவாக்கிய சாதிய மறுப்பை நாமும் பின்பற்றி சாதியில்லா சமுகத்தை உருவாக்க வேண்டும் இன்று மக்கள் மனதில் மதம் எண்ணும் கோட்பாட்டின் மூலமாக மக்கள் மனதில் சாதியை வேர் ஊன்ற முயற்சி செய்கின்றன சாதிய கோட்பாட்டில் மக்கள் பின்தங்கியே காணப்படுகின்றன இன்னும் பின்தங்கி சென்றால் மக்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள். சாதிய கொடுமைகள் அங்கங்கே நடந்த வண்ணம் உள்ளது இந்த நிலையில் இருந்து முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா சிந்தியுங்கள் 

மேலும்

                  

      நீலமும்-புரட்சியும்

                          நீலம் இது ஒரு நிறம் மட்டும் அல்ல, இந்த சமுதாயத்தில் அது ஆற்றிய தொண்டுகள் பல.ஆம், நீலம் என்றாலே நினைவிற்கு வருவது நம் நாட்டின் புரட்சியாளர். கற்பி, ஓன்று சேர், புரட்சி செய் என்று கூறிய மாமேதை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றுறைத்த சீர்திருத்தவாதி. நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக ஜெய் பீம் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் ( பொருள் : தந்தை)  என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ( இயர் பெயர் என்ன:பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்).


                         சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,உயர் கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்,பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர், இப்படி இவரை பற்றி சொல்ல இன்னும் எத்தனையோ உள்ளது.

  

சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்த்தார். அதற்காக சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் கைகளில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.


                 அவருடைய சிந்தாத்தங்களை பின்பற்றி தொடங்கப்பட்ட, கட்சிகளும்  அமைப்புகளும் நீல நிறத்தை தங்களது கொடிகளில் பரவவிட்டிருக்கும். ஏனெனில்அம்பேத்கருக்கு நீல நிறம் பிடித்தமான நிறம்.  பிடித்தமானது என்பதையும் தாண்டி, ஒரு காரணம் உள்ளது.

பரந்து விரிந்த வானம் போன்று நமது சிந்தனைகள் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தவர். வானம் நீல நிறம்தானே, அதனால், நீலம் அவருக்கு இன்னமும் பிடித்தமானதாக ஆனது.


                        இன்று,  மக்களால் அமைக்கப்படுகின்ற அம்பேத்கர் சிலைகளில் நீல நிற கோட் அணிந்து அவர் ஒரு கையில் அரசியல் சாசனத்துடனும், மறு கையை முன்னே நீட்டியவாறு முன்னோக்கி செல்லுங்கள் என அனைவருக்குமான வழியை காட்டுகிறார். அவர் காட்டும் வழி சமத்துவமானது, சனாதனத்திற்கு எதிரானது,ஜனநாயகத்திற்கு ஆதரவானது. அவருக்கு பிடித்தமான நிறத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவருக்கு எதற்க்காக அந்த நிறம்  பிடித்தது என்பதன் அடிப்படையையும் கருத்தில் கொண்டு அவர் வழி நடப்போம்.

நீலம் இது வெறும் நிறமல்ல  சனாதனத்திற்கு எதிராக எழுதப்பட்ட வரலாறு.             

"வீழ்க சனாதனம், வாழ்க ஜனநாயகம்"
          
மேலும்

  ஹைதராபாத்தில் நேற்றைக்கு முன் தினம் கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப் பட்ட கால் நடை மருத்துவர் பிரியங்கா செட்டி பற்றிய செய்தி தாள முடியாத கோபத்தை ஏற்படுத்துகிறது. 
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாவது சகிக்க முடியவில்லை. 
அரசு இக்கொடுஞ்செயலை தடுக்க உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.
இல்லையேல் மக்களின் தீராத கோபம் வெடித்துக் கிளம்பும்  

மேலும்


பிரிவு            பிரிவு இயற்கையின் சாரல் 

பிரிவு எல்லா பயணத்திலும் உடன் வருவது பிரிவின் சுகம்  அறியாதவர்கள் வாழ்வின் இன்பம் அறிவதில்லை 

பிரிவின்  வலி என்பது சுகமான துன்பம் அதை ஏற்று கொள்  பிரிவின் நீண்டதோர் பயணம் வாழ்வின் நிரந்தர இன்பம் 

     

         "வின்னில் இருந்து மழைதுளி பிரிவதாழ் இயற்கை அழகாகிரது"


பிரிவு நிரந்தரம் அல்ல நினைக்கும் வரை பிரிவு நம் வாழ்வில் நம்மோடு தொடரும் நண்பன்   


           "பள்ளி செல்லும் வயதில் தாயிடம் இருந்து பிரிவு 

            மனைவி வந்த பின்னே உறைவிடம் பிரிவு"


பிரிவை ஏற்று கொள் பிரிவின் சுகம் உனரும் வரை

 நீண்டதோர் பயணத்தில் உடன் பயணிப்பவரை விட்டு பிரிவது போல் உடலை விட்டு உயிர் பிரியும் போதும் ஏற்று கொள்வதை போல் பிரிவை ஏற்று  கொள் பிரிவின் சுகம் உணர்வாய்  


பிரிந்த பின்னே சிறிது தூரம் 

சென்று திரும்பி பார் பயணத்தில் நீ தொலைத்த அனைத்தையும் 

உன்னை நீ உணர்வாய் உன் வலிமை உனக்கு புரியும் 

          
  

மேலும்

பெண்ணொருத்தி....


கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை.

தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும்.

நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால்கள் நிழல் தரும் மரத்தின் மடியை நாடிச் செல்கிறது. 

பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிளவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை. அம்மாவின் சேலை வாசனையில் கண் சொருகித் தூங்கும் குழந்தையைப் போல் இப்பேதையின் கண்களும் அயர்ச்சியில் சொருகி மூடின!

இதுபோன்ற கற்பனையும் கவலையுமில்லாத உறக்கம் எப்போதாவதுதான் வருகிறது. உறங்கிய சில கணங்களில், பூச்சிகளின் ரிங்காரம் காதில் விழிப்பு மணி போல் தொடர்ந்து ஒலிக்கிறது. அயர்ச்சி நீங்கி உடலில் புத்துணர்வுப் பிறக்கிறது. பாதச் சுவடு நின்ற இடத்திலிருந்து மீண்டுமொரு இரகசியப் பயணம் தொடர்கிறது.

பாதையின் குறுக்கே செல்லும் பட்டாம்பூச்சி, என்னைக் கண்டுகொள்ளாமலும், தனது பாதுகாப்பை எண்ணிக் கவலையுற்றதாகவும் தெரியவில்லை. இயற்கை அன்னையின் தொட்டிலான இவ்வழகிய வனம், பழக்கப்படாத எனக்கு பாதுகாப்பு அளிப்பதைப் போன்று பட்டாம்பூச்சிக்கும் அரணாக இருக்கிறது. நினைத்துப் பார்க்கும் போது ஆறறிவுடைய மனிதனின் பலம் உயிரற்ற ஜடங்கள் வாழும் நரகத்தில் (நகரத்தில்) மட்டுமே என்பது புலனாகிறது.

வழி நெடுகில் அருவியிலிருந்து விழும் நீரின் சத்தம் கேட்கிறது. இலக்கு இல்லாப் இப்பயணத்தின் முடிவுப்புள்ளி அறியாமல் துள்ளியோடும் மானாக, சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினேன். அதோ தெரிகிறது, அந்த பிரம்மாண்ட அருவி! அருவியின் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீர்த்துளிகள் வழுக்கானப் பாறையில் விழுந்து சிதறிச் செல்கிறது. அதன் நுரைகள் ஈரம் நிறைந்த கரையிலிருக்கும் எனது பாதங்களைத் தீண்டிச் செல்கிறது. 

தாய்ப்பசுவின் காம்பை நோக்கி வாஞ்சையுடன் ஓடிவரும் கன்றைப் போல, இம்மெல்லிய உடல் அருவியை நோக்கி விரைகிறது. வனப்பு என்ற சொல்லின் பொருள் பெண்களுக்கு மட்டுமல்ல, என்றும் வற்றாத இளமையுடன் நிறைந்திருக்கும் இயற்கைக்கும் மிகப்பொருந்தும். குளிர்நீர் முழங்கால் மற்றும் நாபி வரை பரவியதில் சட்டென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவி விரிந்தது. இந்தப் படபடப்பு அடங்கும் முன், பெருகிவரும் நீர் இளமார்பில் பட்டு பருவக் கிளர்ச்சியூட்டிச் செல்கிறது. 

தீண்டலின் பரவசத்தில் எனை மறந்து கண்கள் சொருகி நின்றேன். கண்களிலிட்ட மை நீரில் சுவடின்றி கரைந்து ஒதுங்குகிறது. பெருகிவரும் நீரின் பிரவாகத்தில் மார்பில் கட்டியிருந்த மேலாடையும் கச்சையும் நிலைகுலைந்துச் சரிந்து சென்றதை உணர பல நொடிகளாயிற்று. எனைச் சுற்றிப் பிண்ணியிருந்த நாணம் என்ற வளையம், நீரில் அடித்துச் செல்லும் இலைச்சருகுகளைப் போல அரவமற்று கட்டவிழ்ந்துச் செல்கிறது.

ஆடை சரிந்ததில் திமிறிய மார்புகள் கூச்சத்தில் விடுதலையானதை எண்ணி உள்ளூர வெட்கம் கொண்டது. கார்க்கூந்தலின் சில மயிர்க்கற்றைகள் பிறை போன்ற நெற்றியில் சரிந்து, முகத்திலிருந்த வெட்கத்தை மறைத்து நிற்கிறது. 

நீரில் தொடர்ந்து இருப்பதனால் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து, தேகம் வெப்ப சமநிலை அடைந்து கதகதப்பானது. நீரினுள் பாசிகளைத் தேடித் திறியும் சின்னிஞ்சிறு மீன்கள், அடிவயிற்றில் ஆடை இறுக்கிய வரித்தடங்களையும் அல்குலையும் உரசிச் செல்வது இன்பங்கலந்த வேதனையை அளிக்கிறது. 
நீரின் அணைப்பிலான என் தழுவல்கள் நிகழ்ந்தெழுகையில், தேகத்தில் பரவிய இன்பத் தீயானது மின்னலின் பாய்ச்சலைப் போன்று உள்ளூரப் பரவிச் செல்கிறது. இதுதான் தீண்டலின் சுகமென்று எண்ணி மனம் அளவலாவிய மோகத்தில் சுழல்கிறது.   

குளிர்சுனையின் தழுவலில் இருந்த இவ்வுடல், ஆதவனின் கதகதப்பில் மொட்டவிழும் மலர் போன்று நீருக்கு வெளியில் உதயமானது. மருவி நிற்கும் பின்னழகை செந்நிறப் பாறையில் சாய்த்தும், கீழ்வயிற்றின் தொடர்ச்சியை நீருக்குள் கிடத்தியும், மேலுடலை நீருக்கு வெளியிலும் இருத்தி, அகண்ட வானத்தை கண்டு பிரமிப்புடன் நின்றேன்.

நீருக்கடியிலிருக்கும் மேடு பள்ளங்களை நீரானது மறைத்துச் செல்வது போல், பேதைப் பெண்கள் தத்தம் அங்க இலாவண்யங்களை உடை எனும் போர்வைக்குள் மறைத்துக் கொள்கின்றனர். மேலுதட்டின் மென்மயிர், குவிந்த உதட்டின் ஓரத்தில் ஒட்டி நிற்கும் சிறு நீர்த்திவலைகள் குளிர்க்காற்றில் கரைந்தும், காதோரம் சுருண்டிருக்கும் மயிர்கற்றைகள் தென்றலின் அசைவிலும் வளைந்தாடுகிறது.

நெற்றியிலிருந்த நீர்த்துளிகள் மெல்லச் சரிந்து திண்ணமான மார்பின் மேட்டில் செங்குத்தாய் வடிந்து செல்கிறது. ஆதவனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேற்பரப்பில் பட்டு உலோகப் பளபளப்பான மார்பில் எதிரொளிப்பது, கோயில் தூண்களில் வீற்றிருக்கும் பெண் சிலையின் தனங்களில் வடித்திருக்கும் காம்பு, விளக்கொளியின் பிரகாசத்தில் மிளிர்வது போன்றுள்ளது. இத்தகு நுட்பமான அழகை வடித்திருக்கும் சிற்பி நிச்சயம் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை! 

அடிவயிறு குளிராகவும்  அதே கணத்தில் கனமாகவும் தோன்றுகிறது. தென்றலின் தொடர்ச்சியான ஸ்பரிசம் மேலுடலைத் தீண்டுகையில், மென்மையான வயிற்றின் மேல் படர்ந்து நிற்கும் பச்சை நரம்புகளின் உணர்ச்சி அணுக்கள் ஒருமித்து வெடிப்பது போன்று உள்ளது. 

ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.

மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான  பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !

நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில் !

நீண்ட கனவிலிருந்து சட்டென்று விலகிப் பாயலில் புரளுகையில், அந்தரங்கத்தின் பூட்டவிழ்ந்தது போன்ற எண்ணத்தில் கன்னக்கதுப்புகள் வெட்கிச் சிவந்தன. 

சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை,  மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!

மேலும்

உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே!  

அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. 

நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் மாற்றமுடியாது. அது காண்பவர்களின் நிலையைப் பொறுத்தது – நாம் அச்சப்படத் தேவையில்லை. உனைப் பார்க்கும் எவர்க்கும் என் அகத்தைப் பற்றி அறிய வாய்ப்பில்லை, அதனால் தான் என் ஆழ்மனதின் பொருமலையும், கோபத்தையும், வெறுப்பையும் நான் வெளிக்காட்டுவதில்லை, அதில் ஒரு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.  

ஏன் இப்படிச் சிரித்து ஏளனம் செய்கிறாய்? இது என் மனதினுள் இருக்கும் அச்சத்தின் குறியீடாக இருக்கும் என்று சந்தேகிக்கிறாய்! அது தவறல்ல, உன் கற்பனா சக்தியை என்னால் கட்டுப்படுத்த முடியாது. இப்படிப் பல நேரங்களில் என்னைச் சிந்திக்க வைக்கிறாய். என்னுள் எழும் எண்ணங்களை உன்னிடமிருந்து மறைக்க முற்படும்போதெல்லாம் அனேகமாகத் தோல்வியைச் சந்திக்கிறேன்.

இதில் வியப்பான விடயம் யாதெனில், என் மீது விழும் வெப்பக்கதிர்கள் உன்னுள் தெரிவதில்லை, அதுபோல மழை வரும் நாட்களில் நீ வெளிவருவதில்லை. இப்பிரபஞ்சத்தைப் பற்றிய உன் புரிதல் என்னூடே நிகழ்கிறது, என்னை நீ ஓரு ஊடகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய்! நான் வெவ்வேறு கணங்களில் அணியும் முகத்திரையின் இரகசியத்தை நம்மிருவரைத் தவிர வேறெவரும் அறிந்ததில்லை. என் போல் நீ முகமூடியேதும் அணியாமல் நிர்வாணமே போதும் என்கிறாய், வெட்கங்கெட்டவனே! விந்தையாக உள்ளது - உன் தோற்றத்தில் நீ எவ்வித வண்ணமும் பூசிக்கொள்ளாமல் இருப்பது. கருப்பு நிறத்தில் இருப்பதில் அப்படி என்ன கர்வம் உனக்கு?

இந்த முகமூடி இரகசியத்தைத் தொடர்ந்து காத்துவருவதால் உன்னிடம் தோழமை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக உன்னுடன் பலமுறைப் பேச முயன்றேன், ஆயினும் காண்பவர்கள் சந்தேகிக்கக் கூடுமென்பதால் அவ்வெண்ணத்தை நிறுத்திக்கொண்டேன். உன்னுடனான இந்நெருக்கம் அவளுடனான என் நட்பில் விரிசல் விழச் செய்யுமா? குழம்பி நிற்கிறேன். அதோ அவள் வரும் ஒலி கேட்கிறது, என்னை விட்டுச் சற்று ஒதுங்கி நில்; இன்று இரவு வெளிச்சத்தில் நம் சம்பாசணையை மீண்டும் தொடரலாம்.

உன் பால் பலவித வெறுப்புகள் இருந்தாலும், இறுதியில் என்னை அதிகம் புரிந்துகொண்டவன் நீ தான், என்னை நீ என்றும் வெறுத்தது கிடையாது. உன்னை பிரியும் நாளே இம்மண்ணுலகில் நான் வாழும் கடைசி நாளாக இருக்கும்! நம்மிருவருக்குமிடையே நீளும் இந்தப் புரிதலையும் நெருக்கத்தையும் அவளிடம் சொல்லாதே!

மேலும்

#மாதவிடாய்_நேரத்தில்_வலியில்_துடிக்கும்_பெண்ணை #தீண்டதகாத_ஒன்றாய்_நினைத்து_ஒதுக்கும்_சமுகமே_இதை_கொஞ்சம்_படி 
பெண்களுக்கு மாதத்தில் ஒரு முறை அதாவது மூன்று நாட்கள் இரத்தப் போக்கும் ஏற்படுத்தும் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் உடல் மிகவும் சோர்வு ஏற்படுத்தும் இதை அறிந்து ஓர் காலத்தில் பெண்கள் தனது மாதவிடாய் நேரிடும் போது தனது உடலில் இருந்து அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கை ஏற்படுத்தும் அந்த சமயத்தில் பெண்களின் உடல் சோர்வு ஏற்பட்டு பழகினமாக மாறிவிடுவார்கள் ஆகையால் பெண்களை அந்த மூன்று நாட்களுக்கு எந்த வேலையும் செய்யவிடாமல் ஒய்வு எடுக்க சொல்வார்களாம் அதுவே சிறிது சிறிதாய் மாறி காலப்போக்கில் பெண்ணை அந்த மூன்று நாட்களில் தீண்ட தகாத ஒன்றாக சித்தரித்து விட்டது அதையே நடைமுறையும் படுத்துகிறது இச்சமுகம் .

இதில் மிகவும் வேதனைக்குரியது என்னவென்றால் இடை விடா இரத்தப் போக்கில் உடல் அளவில் வேதனையில் தவிக்கும் அந்த பெண்ணை மனதளவிலும் சிரமத்தை ஏற்படுத்தி இழிவு படுத்தி நாம் ஏன் பெண்ணாக பிறந்தோம் என்று என்னும் அளவிற்கு தள்ளப்படுகிறோம் இந்த நிலையில் ஆண் ஆகிய நாம் இருந்தால் என்ன செய்வோம் நமது கையில் இரு சிறு துளி இரத்தம் வந்தாலே துடிக்கும் நாம் மாதத்திற்கு ஒருமுறை அதாவது மூன்றுநாள் இரத்த போக்கில் தவிக்கும் அப்பெண்ணின் வலியை புரிந்துக்கொள் மனிதா ..
பாவம் என்ன செய்தால் அப்பெண் பெண்ணாய் பிறந்தது அவள் குற்றமா இல்லை இயற்கை உபதையில் சிக்க வைத்த கடவுளின் குற்றமா எதை சொல்வீர் குற்றம் என்று அந்த மாதவிடாய் நேரத்தில் இரத்த போக்கு ஏற்பட வில்லை என எத்தனையோ பேர் மருத்துவமனையை தேடி அழைகின்றனர் இயற்கையின் சூழலை யாராலும் மாற்றவும் முடியாது மாற்றியமைக்க வழியும்மில்லை அப்படி மாற்றி அமைத்தால் தாய்மை எனும் புனிதமே இல்லாமல் போய்விடும்

அப்பெண்ணிற்கு முதல் முறை மாதவிடாய் ஏற்படும் போது ஊரையே கூட்டி சந்தோஷம் பெறும் மனிதா இப்பொழுதாவது சற்று யோசித்து பார் தீண்டைமை ஒழித்து பெண்மையை காப்பாற்றி தாய்மையை போற்று இந்த நிகழ்வு அவமானமும் அல்ல இழிவும் அல்ல இயற்கையின் செயலே....

ஆக்கம் 
முஹம்மது ரியாஜூல்லா DDTP

மேலும்

மேலும்...

மேலே