எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 80 -----------------------------​----------​ நான் அனைவருக்கும்...

  அனுபவத்தின் குரல் - 80
-----------------------------​----------​


நான் அனைவருக்கும் பொதுவானதாக ,பொருந்தக்கூடிய ஒன்றைப் பற்றி கூற விரும்புகிறேன் . ​யாரையும் குறிப்பிட்டு அல்லது தனிநபர் ஒருவரை தாக்கியோ இதை பதிவிடவில்லை . நாம் மற்றவர்களிடம் பேசும் போது, ஒருவருக்கொருவர் நிறை குறைகளை பரிமாறிக்கொள்ளும் போது சில நேரத்தில், சிலரிடம் உண்மையை மறைத்து பேச நேரிடும். உள்ளதை அப்படியே பகிர்ந்து கொள்வதும் உண்டு . பெரும்பாலும் மறைத்து பேசுவது என்பது அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே நிகழும் .ஏனெனில் அதற்கு தகுந்த காரணங்கள் இருக்கும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் நமக்கு மாற்று கருத்து உடையவர்களிடம் அல்லது நம் மனதுக்கு ஒவ்வாத ஒருவரிடம் பேச வேண்டிய சூழ்நிலையில் நாம் அதை மறைத்து , எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் , முகபாவனைகளை மாற்றிக்கொண்டு மிகவும் யதார்த்தமாக உரையாடுவோம் ...என்னையும் சேர்த்து தான் கூறுகிறேன் . இது இயற்கையாக உள்ள மனிதனின் குணம் . 


ஒருசிலர் மிகவும் வெள்ளந்தியாக இருப்பதுடன் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசிடுவர் . நமக்கு அவர்களை பார்க்கும் போதே பிடித்துப்போகும் .மேலும் மேலும் பேசிட தோன்றும் .சில நேரங்களில் சில மனிதர்கள் என்பதை போல , ஒருசிலர் வேண்டுமென்றே உள்ளத்தில் ஒன்றும் வெளியே ஒன்றுமாக இருப்பதும் நாம் காணமுடியும் . அதை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியாது . நமக்கும் அவர்களை பற்றி அறிந்ததால் அது பழகிவிடும் . நாம் அவர்கள் கூறும் எதையும் அப்படியே உண்மையென நம்புவதும் இல்லை , ஏற்பதும் இல்லை . அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாமும் நம்மை மாற்றிக்கொள்வது என்பது கட்டாயமாகிறது . சமுதாயத்தில் இவை யாவும் சாதாரணமாக நிகழ்பவை தான் . 


ஆனால் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரிடம் நம்மைப் பற்றிய அத்தனை உண்மைகளையும் , தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் , மற்றவர்களைப் பற்றிய சொந்த அபிப்பிராயங்களையும் பரிமாறிக் கொளவோம் நம்மையும் அறியாமல். அவர் உறவினராகவோ அல்லது நண்பராகவோ இருக்கலாம் . மனித இனத்தின் மாற்ற முடியாத பண்பு அது .ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவெனில், நிரந்திரமிலா இந்த வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் எவரிடமும் உண்மையாக இருத்தல் நன்று . உண்மை உள்ளத்துடன் பழுகுதல் பேசுதல் மிகவும் அவசியம் . ஒன்றை மறைப்பதால் நாம் மற்றொன்றை இழக்க தயாராக இருக்க வேண்டும் . அது நட்பாகவோ , உறவாகவோ இருக்கக்கூடும் . அதன் மூலம் நாம் அனபையும் பாசத்தையும் நமபக்கத்தனமையையும் இழக்கக் கூடும் என்பதை மறத்தல் கூடாது . உண்மை நிச்சயம் என்றாவது ஏதோ ஒரு வழியில் உதவி புரிந்திடும் . இதை நான் எனது அனுபவத்தில் கற்றவன் , உணர்ந்தவன் .​

உண்மையாக இருப்போம் ,உற்சாகமாய் வாழ்வோம் !!!!!!!!!!. 


​பழனி குமார்  

நாள் : 6-Feb-18, 11:11 pm

மேலே