எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வைகறையின் விடியல் கீழ் வானத்தின் சிவப்பு சிட்டு குருவிகளின்...

  
வைகறையின்  விடியல்  

கீழ் வானத்தின் சிவப்பு
சிட்டு குருவிகளின் சிற்றின்ப ராகம் 
அடுப்படியில் அம்மா 
விதவிதமான சமையல 
உடலெங்கும்வியர்வை வெள்ளம் 
உற்சாகத்துடன் உடன்பிறந்தோர்


கடிகாரம் பார்த்தபடி 
ஆளுக்கோர் திசையில் அள்ளித் தின்றபடி 
அவசரமாய் ஓடுகின்றனர் 
படுக்கையறையில் பயந்தபடி நான் 

எதிரே வந்தால் எமனாம் 
எள்ளிநகையாடி வார்த்தையால் எரிக்கின்றனர்
கதவு கட்டில் கடிகாரம் போல 
வீட்டிலிருக்கும் (முதிர் கன்னி) அக்ஹ்ரினை  நான்              

நாள் : 5-Feb-18, 11:57 pm

மேலே