எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூறிவிடவா...?


அம்மா கடைக்கு அனுப்புகிறாள்
நான்கு பொருளில் ஒன்றை மறந்து விடுகிறேன் ...

  சிந்தையில் எதை வைத்துக் கொண்டு சென்றாய்.
 என்று சினம் கொண்டு சாடுகிறாள்
 
நீ சொல் எட்டப்பனாக மாறிவிடவா?

மேலும்

அதிகாலையில்  பூத்த அதிசய மலராய்  என்னுல் நீயும் பூத்தாயடி...
அந்தி மாலையில் மறையும்  ஆதவனை போல என்னை நீயும் மறந்தாயடி...
ஆறுதல் சொல்ல கூட  இங்கு யாரும் இல்லை ...
அனாதையாக  நிக்கும் சிறுபிள்ளை....
கண்டுகொள்ள வில்லை நீயும் என்னை...
நான் காதலிப்பேன் என்றும் உன்னை....
                                             _ தங்கத் தமிழன்

மேலும்

 மழலையின் நகை




இதழ் விரித்து நீ பேசும் 
ஒவ்வொரு வார்த்தையும்
என் மனதை கொள்ளை கொள்ளும்.
உன் கள்ளமற்ற சிரிப்பு
ஆயிரம் மலர்களின் 
அணிவகுப்பு.
மனதில் வலியை மாயமாய்
மறைய செய்யும் மலர்க்குன்று.

மேலும்

என் 
துடிக்கும் இதயம் 
துடிப்பது உன்னாலே... 
துடிப்புடன் உரைக்கிறேன் 
நீ 
துடித்தால் துடித்துவிடுவேன் 
இதயம் 
துடிப்பதை நிறுத்திவிடுவேன் 

இரக்க மனம் 

ஞான. ஷைலா மேரி  

மேலும்

அதெப்படி தீ 
பற்ற வைக்காமலே 
பற்றி எரிகிறது 

ஏழையின் வயிறு 

ஞான. ஷைலா மேரி 




மேலும்

நான் என்ன 

வீட்டில் பூச்சியா? 
ஒன்றுக்கும் உதவாமல் 
சாவதற்கு...
பட்டு பூச்சி
மரித்தாலும் நூலாக 
வெளிவருவேன் 

ஞான. ஷைலா மேரி  

மேலும்

பேசாமல் இருந்த போது 
இடைவெளி இல்லாமல் 
இணைந்தே கிடந்தோம் 
பேச ஆரம்பித்தோம் 
ஒருவரை ஒருவர் பிரிந்தோம்
உதடு 
ஞான. ஷைலா மேரி.

மேலும்

காத்திருக்கிறேன்....
அன்பால் அரவணைத்து,
அமுது போல் அறிவூட்டி,
நல்லொழுக்கத்தினை  உனக்களித்து,
கல்வியால் மெருகேற்றி,
மனிதத்தை உன்னுள் வளர்த்து,
மேன்மை பொருந்தியவராய்  உன்னை நாட்டிற்கு    வளர்தளிக்க காத்திருக்கிறேன்.. 
நீ வருவாய் என..
சிறப்பானவை எளிதில் கிடைப்பதில்லை..
அதனால் தானோ நீ வருவதற்கு தாமதம்...
வந்துவிடு...
உன்னை ஈன்று வளர்க்கும் மகிழ்ச்சியை தந்து விடு...
நீ வருவாய் என காத்திருக்கிறேன்....

மேலும்

வாக்காளனே உனக்கொரு ஒரு செய்தி...


ஆங்கில வருடத்தின்
நான்காம் திங்களின்
ஆறாவது நன்னாளில்
அன்னை தமிழ் மண்ணை
ஆளப்போகும் தலைவனை
தேர்ந்தெடுக்க காத்திருக்கும்
வாக்காள பெருமகனே..!!

உன்னிடத்தில் உரிமையாய்
உரைத்து சென்றிட
விரும்புகிறேன்..!!

சில நூறு மேல்
மோகம் கொண்டு
வாக்களிக்காதே…
அகதியாய் வாழ்ந்திட
நேரிடலாம்…

வாக்களித்திட
பொருள் பெற்று
நீ ஊழலை
தொடங்கி வைத்திட
கொள்ளையடித்து
பொருள் சேர்க்கிறார் – என
ஒருபொழுதும் திட்டாதே…


ஏனெனில்
நீ
பொருளினை
பெற்றிடும்
பொழுது வரை
அவன்
அரசியல்வாதி…
அந்த கனம் கொண்டு
அவனே முதலாளி….

சின்னங்களை கண்டு
வாக்களிக்காதே…
நல்ல
சேவகனை கண்டு
வாக்களித்திடு…

நீ
தேர்ந்திடுத்திடும்
தலைவன்
நேர்மைவழி நடந்திடும்
நெஞ்சுறுதி உள்ளவனாய்
அடுத்தவர்
துயர் நிலை கண்டு
வருந்தி
வாரி வழங்கிடும்
வள்ளலாய் இருந்திட
தேவையில்லை…


தீய வழி தவிர்த்து
வாழ்ந்து
மனித்ததுவம் கொண்ட
மனிதனாய் இருத்தலே
போதுமானது…

உள்ளினுள் உதித்தை
உரைத்துவிட்டேன்…

சிந்தித்து வாக்களித்திடு
சிறப்போடு வாழ்ந்திட…
சிந்திக்காமல் வாக்களித்தால்
சிரிப்பை மறந்து
வாழ நேரிடலாம்…

தமிழோடு வாழ்வோம்…
தலை நிமிர்ந்து வாழ்வோம்…

திரு. அரிகரன்

மேலும்

                நிலவு பெண்ணே

 

என் கண்ணுக்குள் 👁️👁️நிலவாய் 🌛நீ ஒழிந்து🙈 கொண்டாய்..🤗
உன் வருகையினை 🤔எதிர்பார்த்து என் கண்கள் 👁️👁️காத்திருக்கின்றன 😍

உனது வருகையினால் ஆம்பல் மலர்கள் அனைத்தும் மலர்ந்து விட்டனவே🌸 ..!ஆனால் தாமரை 🌷 என்னதவறு செய்தது ?இப்படி தலைகுனிந்து😔 குவிந்து விட்டனவே ??

இரவையும் 🌚,நண்பகலாக்கி 🌛செல்கின்றாயே ..!!அப்படிப்பட்ட உன்னை இராகுவாகிய பாம்பு 🐍விழுங்குவதேனோ ??
இதில் என்ன நியாயம்🤭

வளர்ந்து வளர்ந்து🤩 வந்த நீ இப்படி
மீண்டும் வாடி வாடி போவதேனோ🤔...???
நாங்கள் உறங்கும் நேரத்தில் ,கூகை ஆந்தை போல கண் விழித்து 👁️👁️காத்திருக்கின்றாயே..
       அப்படி என்றால் உனது உறக்கம் பகல் கூட்டினில் தானோ🤔

கோடி விண்மீன்கள் உன்னை சூழ வானக்கடலில்☁️ வெண்ணிற ஓடம் 🛀போல மிதந்து வருகின்றாயே....
      
உன்னை காண நாங்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்😍.
உன் அழகினை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை🥰

              "நிலவு பெண்ணே"


மேலும்

மேலும்...

மேலே