எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாக்காளனே உனக்கொரு ஒரு செய்தி... ஆங்கில வருடத்தின் நான்காம்...

வாக்காளனே உனக்கொரு ஒரு செய்தி...


ஆங்கில வருடத்தின்
நான்காம் திங்களின்
ஆறாவது நன்னாளில்
அன்னை தமிழ் மண்ணை
ஆளப்போகும் தலைவனை
தேர்ந்தெடுக்க காத்திருக்கும்
வாக்காள பெருமகனே..!!

உன்னிடத்தில் உரிமையாய்
உரைத்து சென்றிட
விரும்புகிறேன்..!!

சில நூறு மேல்
மோகம் கொண்டு
வாக்களிக்காதே…
அகதியாய் வாழ்ந்திட
நேரிடலாம்…

வாக்களித்திட
பொருள் பெற்று
நீ ஊழலை
தொடங்கி வைத்திட
கொள்ளையடித்து
பொருள் சேர்க்கிறார் – என
ஒருபொழுதும் திட்டாதே…


ஏனெனில்
நீ
பொருளினை
பெற்றிடும்
பொழுது வரை
அவன்
அரசியல்வாதி…
அந்த கனம் கொண்டு
அவனே முதலாளி….

சின்னங்களை கண்டு
வாக்களிக்காதே…
நல்ல
சேவகனை கண்டு
வாக்களித்திடு…

நீ
தேர்ந்திடுத்திடும்
தலைவன்
நேர்மைவழி நடந்திடும்
நெஞ்சுறுதி உள்ளவனாய்
அடுத்தவர்
துயர் நிலை கண்டு
வருந்தி
வாரி வழங்கிடும்
வள்ளலாய் இருந்திட
தேவையில்லை…


தீய வழி தவிர்த்து
வாழ்ந்து
மனித்ததுவம் கொண்ட
மனிதனாய் இருத்தலே
போதுமானது…

உள்ளினுள் உதித்தை
உரைத்துவிட்டேன்…

சிந்தித்து வாக்களித்திடு
சிறப்போடு வாழ்ந்திட…
சிந்திக்காமல் வாக்களித்தால்
சிரிப்பை மறந்து
வாழ நேரிடலாம்…

தமிழோடு வாழ்வோம்…
தலை நிமிர்ந்து வாழ்வோம்…

திரு. அரிகரன்

பதிவு : Arikaran
நாள் : 24-Mar-21, 10:52 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே