எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் -86 ---------------------------------------​ சாலைகளில், பொது இடங்களில்...

  அனுபவத்தின் குரல் -86 
---------------------------------------​


சாலைகளில், பொது இடங்களில் , வணிக வளாகங்கள் அருகில், திரையரங்கின் வாயிலில் மற்றும் மக்கள் தொழுகின்ற கோவில், மசூதி, கிறித்துவ தேவாலயங்களில் என்று பல இடங்களிலும், ஆதரவற்ற வாழ வழியற்ற ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் பலர் நின்று கொண்டு பிச்சை எடுக்கும் காட்சியை இன்றும் காண்கிறோம். அவர்கள் நிலையை கண்டவுடன் மனது வலிக்கும் . ஒருசிலர் இரக்கப்பட்டு ஏதோ முடிந்ததை காசை தருவதும் மறுக்கவில்லை. வேறு சிலர் கண்டும் காணாதது போல் இருப்பது வழக்கம். ஒருசிலர் அக்கறையுடன் அவரது நிலைகளை விசாரிப்பர். இன்னும் சிலர் அவர்கள் மீது எரிந்து விழுவர். அவர்களும் அதனால் ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே கடந்து செல்வர் . இதுபோன்ற அவல நிலை ஏன் இன்னும் தொடர்கிறது என்று நினைத்துக் கொள்வேன் . 

அனைவரும் மனித சமுதாயம் என்று பொதுவாக கூறுகிறோம் , எழுகிறோம் ...ஆனாலும் இந்த மாறுபட்ட நிலை சமூகத்தில் ..இருப்பவன் இல்லாதவன் என்ற நிலை ...வசதி படைத்தவன் வறியவன் என்ற கொடுமை ...இதுவே ஒரு பிரிவினைதான் . அதையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை .இந்த நிலை நான் அறிந்த நாள் முதல் இன்றுவரை மாறவேயில்லை என்ற ஆதங்கம் என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது அவ்வப்போது . ஒரு சில நல்ல இதயங்கள் உதவிகள் செய்தாலும் , சில சமூக அமைப்புகள் பலவிதத்தில் உதவிகள் புரிந்தாலும் இன்னும் அவர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர வறியவர்கள் , பிச்சை எடுப்பவர்கள் குறையவே இல்லை . அவர்கள் உள்ளத்தில் மற்ற வசதி உள்ளவர்களை காணும்போது எப்படி எல்லாம் தோன்றும் ...எந்த அளவுக்கு பெருமூச்சு எழும் ...நம் நிலை இப்படி இருக்கிறதே என்ற கவலை , சோகம் மனதை அழுத்தும் ...என்றெல்லாம் நான் யோசிப்பிப்பேன் .அவர்களை கடந்து சில நொடிகள் என்னுள் இந்த எண்ணம் தோன்றி மறையும் அதற்கு பிறகு நானும் மறந்து விடுவேன் ..நானும் ஒரு சராசரி மனிதன் என்பதால் .

ஆனாலும் எனது ஆழ்மனதின் வேட்கை , என்றும் எனக்குள் உள்ள நிலைத்த விருப்பம் என்னவெனில் இதுபோல் பிச்சை எடுக்கும் நிலையே இல்லாமல் இந்த பூமி மாறவேண்டும் என்பதே . பணத்தில் புரளும் கோடீஸ்வர பெருமக்கள் இல்லாத ஏழைகளுக்கு உதவ வேண்டும் . அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து உதவ வேண்டும் . சிலர் இருக்கலாம் ..நமக்கு தெரியாமல் . மறுக்கவில்லை . அரசாங்கங்கள் அவர்கள் மறுவாழ்வு பெறுகின்ற வகையில் திட்டங்கள் கொண்டு வரவேண்டும் . அடிப்படியாக வேலை இல்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் . அடிப்படை வசதிகள் பெருகிட வேண்டும் .ஆனால் இன்றுள்ள அரசியலில் இதற்கு நேர்மாறாக நடைபெறுகிறது என்பது உண்மை . இது அனைவருக்கும் பொருந்தும் . காலம் மாறிடும் என்ற நம்பிக்கையில் என காலத்தை கழித்திடும் பலரில் நானும் ஒருவனே . நிலை மாறினால் நிம்மதி தானே .


பழனி குமார்

( படம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தது )  

நாள் : 16-Feb-18, 8:12 am

மேலே