எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*இயற்கையின் கோபம்* எழில்மிகு இயற்கையே என கவியெழுத எனக்கும்...

*இயற்கையின் கோபம்*


எழில்மிகு இயற்கையே என        கவியெழுத எனக்கும் ஆசைதான் !
எழுத்தாணி கொண்டு இட்ட
  மையினூடே இயற்கை காரி    உமிழ்ந்த்து என் கவித்தாளில் !
இருக்கி்றேனென்று நீயே சொல்கிறாய் எங்கே இருக்கிறேன் எடுத்துக்காட்டென்று !
மலை - அட்டா ! எம் சாண்டு என்று பெயர்ப்பது தெரியாதோ ?
மழை - மூழ்கிட வேண்டாமென முழங்காலில் தவமிருக்கும் மாந்தர்கள் .
வெயில் - நரகமென்றால் அதுதானே எனும் உள்ளூர் அழகிகள்.
குளிர் - இரவினில் நீ வரவே இணைதேடும் இளைஞர்கள்.
காற்று - கண்ணுக்கே தெரியாதென்ற நீ தெரிகிறாயே புகைமண்டலமாய். 
கடல் - இருக்கிறாய் நாங்கள் இறக்கவே ! இருந்தும் இருக்கிறாயே சுனாமியாய்.
வானம் - வானிலை மாறியே போனதனால் நாங்கள் உனை கண்டுகொள்வதில்லையே. 
மேகம் - சுயநலவாதி ! எங்கள் ஊர் அரசியல்வாதி போல். 
மலர்கள் - கன்னிகையை காதல் வலையில் கவர்ந்திழுத்தே  பலர் வாழ்வை அழித்த தீ.
பறவைகள் - கூண்டுக்குள் வாழ்வதே பறவையென்று காண்கிறோம்.
குழந்தைகள் - தப்பிப் பிறந்த நரக தேவதைகள் கொடூரங்களுக்கு மத்தியில்.
மனிதர்கள் - பிறர்க்காகவே வாழும் சுயநலவாதிகள் பகட்டாக.
மரம் - காட்டை அழித்து ஒரு மரம் நடுகிறோமே போதாதா ?
நிலவு - கரைபடிந்த பிலிப்சு சுடர் கவனிக்க யாரிமின்றி.
சூரியன் - மனிதனால் கோபமாகி எரியும் சிவனின் நெற்றிக் கண் அழிவு விரைவில்.
ஆறு - அப்படியென்றால் ? ஓ மணல் சுரங்கமா ? சாக்கடை கால்வாயா ?
ஆசை - இவ் இயற்கை சில ஆண்டிலேயே மரண கவியாக மாற வரி வகுத்த்து பே(ய்)ர்
 ஆசையே !

நாள் : 17-Feb-18, 11:24 am

மேலே