பிரபாகரன் மணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரபாகரன் மணி |
இடம் | : விளாகம், அரியலூர். |
பிறந்த தேதி | : 15-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 0 |
சக மனிதரை உடன்பிறந்தவரான ஒரு குடும்பத்தைப் போல பாவித்து வாழ்வதே வாழ்வாகும்.
ஒரே வரியில் பெண்மை என்றிடல் நலம்
வானில் தனித்து நிற்கிறது
"நிலா"..
"நீ" இல்லாத என்னை
போலவே..!
❤சேக் உதுமான்❤
தனிமையோடு பேசு..!
கவிஞனுக்கு தனிமை
கற்பனையின் ஊற்று!
துறவிக்கு தனிமை
தவத்தின் வலிமை!
இராணுவ வீரனுக்கு தனிமை
தீரத்தின் அடையாளம்!
காதலில் தனிமை
அன்பின் உச்சகட்டம்!
நிலவின் தனிமை
பெண்மையின் தன்னம்பிக்கை!
ஆராய்ச்சிக்கு தனிமை
உலகுக்கு புதிய கண்டுபிடிப்பு!
தவிப்பதற்க்கு மட்டுமல்ல தோழனே
உலகில் நீ தனித்து தெரியவும்
தனிமை அவசியம்...
தனிமையோடு பேசு!
*இயற்கையின் கோபம்*
*இயற்கையின் கோபம்*
ஐஸ் கிரீம் அவளல்ல
நான்தான்
வெளியே அவளைக்
காணும்போதெல்லாம்
உருகுவதால்
அவளை பார்க்காமல் வீட்டின்
உள்ளே செல்லும்போதெல்லாம்
இருகுவதால்
நிலா அவளல்ல
நான்தான்
களங்கம் என் மனதில் உள்ளதால்
அவளை சுற்றியே என் பாதம் தேய்வதால்
அவளின் கூந்தலல்ல
கார்மேகம்
என் கண்கள்தான்
அவளுக்காக ஏங்கி அழுவதால்
மீன்விழி அவளல்ல
என்விழிதான்
எப்போதும் கண் நீரிலேயே உள்ளதால்
மயில் அவளல்ல நான்தான்
அவளைக்கண்டதும் ஆடுவதால்
மலர் அவளல்ல
நான்தான்
அவளின்றி வாடுவதால்
மான் அவளல்ல நான்தான்
அவள் கண்டதும் துள்ளி ஓடுவதால்