எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மயில்கல்லில் ஹிந்தியில் எழுதினீர்கள் என் மாண்புமிகு தமிழ் சேதத்து...

மயில்கல்லில்
ஹிந்தியில் எழுதினீர்கள்

என் மாண்புமிகு தமிழ் சேதத்து
நிகழ்ச்சிகளில்
சமஸ்கிருதம் பாட்டுப் பாடி
என் தமிழ் தாயை
மலடி என்றாக்கினீர்கள்..

பேதம் கற்பித்து
பிரிவினை உண்டாக்க
மதத்தை கையிலெடுதீர்கள்..

உங்கள் பாதம் பட்டாலே
நாங்கள் கத்திக் குவிப்போம்
என்றஞ்சி 
எங்கள் அம்மாவைக்கொன்று
ஆட்சியை கையிலெடுத்தீர்கள்

ஆட்சி நிலைக்குமா
என்று பயந்து ரஜினியின்
பாதம் பற்றினீர்கள்

ஆங்காங்கே
அக்கா தமிழிசைக்கு
ஆசை வார்தை காட்டி
அம்புலி மாமா
கதை சொன்னீர்கள்..

பின்னும் நாங்கள்
எங்கள் தமிழினத்துப்பற்றை
விட்டதாய் இல்லை..

இன்னும் உயிர் மட்டுமே
மிச்சம் என்றிருக்கின்றது..
இதையும் பறித்துத் தான் 
நீங்கள் பார்த்திடுங்களேன்..

செத்தும் பேயாய் வந்து
எங்கள் தமிழ் காத்திடுவோம்
இது பிடிவாத குணம் கொண்ட
தமிழ் இனத்தின் அடையாளம்..

பதிவு : Barathi senthil
நாள் : 2-Mar-18, 1:18 am

மேலே