எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிதானம் என்பதெல்லாம் விட்டு நீண்ட தூரம் போனது கனா...

நிதானம் என்பதெல்லாம்
விட்டு நீண்ட தூரம் போனது

கனா கண்ட வாழ்கை
இன்றெல்லாம் 
இல்லாமல் இங்கே ஆனது..

புராணத்து தமிழ் வாழ்வை
யோசிக்கும் போது
பேசாமல் பிரிட்டனே கூட
நம்மை ஆண்டால் என்ன
என்று தான் தோணுது..

காமராஜரோடு கல்வியும்
கக்கனோடு அரசியலும்
கலைஞரோடு தமிழும்
அம்மாவோடு வீரமும்
செத்துத் தான் போனது..

ஈனப் பிறப்பென்று
தமிழனை நாடே நினைக்குது
இந்த நிலமை நெஞ்சோடு
ஆயிரம் ஈட்டிகளை
ஒரு சேர எடுத்து வீசுது..

மானிலம் காக்க 
நாமெல்லாம் 
என்ன செய்ய போகிறோம்?

நம் மௌனம் 
கரிகால சோழனையும்
கட்ட பொம்மனையும்
பெரிதும் பாதிக்கிறது..

உலகத்தின் மூத்த குடி
நம் தமிழ் குடி..
இன்னும் நாம் அடங்கி
கிடப்பதெல்லாம்
துயரத்திலும் பெரும் துயரமடி

பதிவு : Barathi senthil
நாள் : 2-Mar-18, 1:18 am

மேலே